தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பாடப்புத்தகம் தர இழுத்தடிப்பு: இழப்பீடு வழங்க பல்கலைக்கு அறிவுறுத்தல்!

பாடப்புத்தகம் தர இழுத்தடிப்பு: இழப்பீடு வழங்க பல்கலைக்கு அறிவுறுத்தல்!

பாடப்புத்தகம் தர இழுத்தடிப்பு: இழப்பீடு வழங்க பல்கலைக்கு அறிவுறுத்தல்!


UPDATED : நவ 18, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 18, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
பல்கலைக்கழகம் அறிவித்தபடி, அட்மிஷன் போதே பாட புத்தகங்களை வழங்காததால், மாணவி ஒருவர் நுகர்வோர் அமைப்பிடம் முறையிட்டார்.
பாடப் புத்தகங்களை நான்கு மாதங்கள் தாமதமாக வழங்கியதால் தேர்வு எழுதமுடியாமல் பாதிக்கப்பட்ட அம்மாணவிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
போடிநாயக்கனூர் பகுதியைச் சேர்ந்த சிவகாயத்ரி 2007, நவம்பர் 24ம் தேதி மதுரை காமராஜ் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி மையத்தில் எம்.காம்., படிப்பில் அட்மிஷன் பெற்றார். பல்கலைக்கழக விளக்கவுரையில் குறிப்பிட்டபடி, அம்மாணவிக்கு உடனடியாக புத்தகங்கள் வழங்கப்படவில்லை. ‘போதிய ஸ்டாக் இல்லையென்றும், பிறகு புத்தகங்கள் வழங்கப்படும்’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று வரும்... நாளை வரும் என்று நான்கு மாதங்களாக காத்திருந்தும் மாணவிக்கு பாடப்புத்தகம் கிடைத்தபாடில்லை. பல்கலைக்கழகத்தை அணுகியும் பயனில்லாததால், அம்மாணவி நோட்டீஸ் அனுப்பினார்.
அதனையடுத்து, 2008 பிப்ரவரி மாதம் மாணவி சிவகாயத்ரிக்கு பல்கலைக்கழகத்திடம் இருந்து அறிவிப்பு வந்தது. ‘உங்களுக்குரிய, அதில் பாடப் புத்தகம் தயாராக உள்ளது; அதனை பெற்றுக்கொள்ளுமாறு’ தெரிவிக்கப்பட்டது.
மே மாதம் தேர்வு நடக்கும் நிலையில், இனி புத்தகம் கிடைத்தாலும் தேர்வை சரியாக அணுக முடியாது என்று அந்த மாணவி கருதினார்.

பல்கலைக்கழகம் பாடப்புத்தகம் வழங்க நான்கு மாதம் காலதாமதம் செய்ததால், ஓராண்டு காலம் விணாகி விட்டது; அதற்கு காரணமான பல்கலைக்கழகம் தனக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று அம்மாணவி மாவட்ட நுகர்வோர் அமைப்பிடம் சென்றார்.
மனுவை விசாரித்த நுகர்வோர் அமைப்பு தலைவர் சங்கர நாராயணன் மற்றும் உறுப்பினர் கோபி ஜெயந்தி ஆகியோர் ‘பல்கலைக்கழகம் குறிப்பிட்டபடி, அட்மிஷன் போதே பாடப்புத்தகங்கள் வழங்காமல் நான்கு மாதம் இழுத்தடித்தால், மாணவி சிவகாயத்ரி தேர்வு எழுதமுடியவில்லை. எனவே, அம்மாணவிக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று பல்கலைக்கழகத்தை அறிவுறுத்தியுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us