தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘கட்-ஆப்’ மார்க் அறிவிக்காததால் தேர்வு எழுதியவர்கள் குழப்பம்

‘கட்-ஆப்’ மார்க் அறிவிக்காததால் தேர்வு எழுதியவர்கள் குழப்பம்

‘கட்-ஆப்’ மார்க் அறிவிக்காததால் தேர்வு எழுதியவர்கள் குழப்பம்


UPDATED : நவ 21, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 21, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


தேனி:
தமிழக அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் -4 முடிவுகள் வெளியான பின்பும் ‘கட்-ஆப்’ மார்க் விவரம், வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு குறித்த தகவல்கள் இல்லாததால் தேர்வு எழுதியவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.
அரசு அலுவலகங்களில் காலியாக உள்ள 3,368 டைப்பிஸ்ட், 507 ஸ்டெனோ பணியிடங்களுக்கு, தேர்வாணையம் கடந்த ஜன., 27ம் தேதி குரூப் -4 தேர்வினை நடத்தியது. இதற்கான முடிவு கடந்த 7ம் தேதி இணையதளத்தில் வெளியிடப்பட்டது. தேர்வானவர்களின் எண்கள் மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ளன. ‘ கட்-ஆப்’ மார்க் விவரம், வகுப்பு வாரியான இட ஒதுக்கீடு குறித்து தகவல்கள் இடம்பெறவில்லை.
இந்நிலையில் தேர்வானவர்களுக்கு வரும் டிச., 2ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடைபெற உள்ளது. இதற்கு முன்னர் நடத்திய தேர்வுகளில் ‘கட்-ஆப்’ மார்க், இட ஒதுக்கீடு விவரங்கள் முன்னதாகவே அறிவிக்கப்பட்டிருந்தன. தற்போது நடந்த குரூப் -4ல் இந்த விவரங்கள் அறிவிக்கப்படாததால் தேர்வு எழுதியவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us