தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி

முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கு பயிற்சி


UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM

ADDED : ஜூலை 26, 2013 08:06 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 26, 2013 12:00 AM ADDED : ஜூலை 26, 2013 08:06 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு சார்பில், முதுகலைப் பட்டதாரி அறிவியல் ஆசிரியர்களுக்கான பயிற்சி வகுப்புகள் இன்று துவங்குகிறது.

சென்னை மாநகராட்சி மற்றும் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள், எளிமையான முறையில், முழு ஈடுபாட்டுடன் அறிவியல் பாடங்களை கற்றுக் கொள்ள, தமிழ்நாடு அறிவியல் மன்றங்கள் கூட்டமைப்பு, பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதன்படி, வேதியியல், இயற்பியல் முதுநிலைப் பட்டதாரி ஆசியர்களுக்கு, "அறிவியல் கற்பித்தலில் புதிய முறைகள்" எனும் தலைப்பில், இரு நாள் பயிற்சி வகுப்பு, இன்று துவங்கி (26ம் தேதி), நாளை வரை நடக்கிறது.

ஆசிரியர்கள், மாணவர்களுக்கு எப்படிப் பாடங்களை நடத்த வேண்டும் என்பது குறித்து, பயிற்சி வழங்கப்படுகிறது. சென்னை, காந்தி மண்டப சாலை, அறிவியல் நகரில் நடக்கும் பயிற்சி வகுப்பை, உயர் கல்வித் துறை கூடுதல் செயலர் உமா மகேஸ்வரி, இன்று துவக்கி வைக்கிறார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us