UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 08:34 AM
அ நிறம் | அளவு
வேலூர்: போக்குவரத்து விதிகள் கடைபிடிக்காத, 45 பள்ளி வாகனங்களை, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் பறிமுதல் செய்தனர்.
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலர் தலைமையில் குழுவினர், மூன்று நாட்களாக பள்ளி வாகனங்கள், ஆட்டோக்களை ஆய்வு செய்து வருகின்றனர். ஆய்வில், படிகட்டுக்களில் மாணவர்களை உட்கார வைத்து பயணம் செய்த, 50 டிரைவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
போக்குவரத்து விதிகளை சரியாக கடை பிடிக்காத, 45 தனியார் பள்ளி பேருந்துகளை பறிமுதல் செய்தனர். 35 பஸ், ஆட்டோக்களுக்கு, 15 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
