"புதிய பொறியியல் கல்லூரிகள் வருகையால் காலியிடங்கள் அதிகரிப்பு"
"புதிய பொறியியல் கல்லூரிகள் வருகையால் காலியிடங்கள் அதிகரிப்பு"
UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 08:44 AM
நேற்று மாலை, அண்ணா பல்கலை பொறியியல் கலந்தாய்வு முடிந்ததும், அவர் கூறியதாவது: நடப்பாண்டில், 14 புதிய பொறியியல் கல்லூரிகள் வந்தன. ஏற்கனவே இருக்கும் கல்லூரிகளில், பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு, ஏ.ஐ.சி.டி.இ., கூடுதல் இடங்களை ஒதுக்கீடு செய்தது.
தனியார் கல்லூரிகள், தங்களிடம் உள்ள மொத்த இடங்களில், 65 சதவீதத்தை, கலந்தாய்வுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஆனால், பல கல்லூரிகள், 65 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை, "சரண்டர்" செய்து விட்டன.
இதுபோன்ற காரணங்களால், இந்த ஆண்டு, காலியிடங்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த வகையில் மட்டும், 22 ஆயிரம் இடங்கள், கூடுதலாக வந்தன. புதிய கல்லூரிகள் உள்ளிட்ட சில கல்லூரிகளில் மட்டும், 10 சதவீத இடங்கள் நிரம்பியுள்ளன.
120 கல்லூரிகளில், 90 சதவீதத்திற்கும் அதிகமாக, இடங்கள் நிரம்பியுள்ளன. இடைப்பட்ட கல்லூரிகளில், சராசரி அளவிற்கு தான், இடங்கள் நிரம்பியுள்ளன. இவ்வாறு, உத்திரியராஜ் தெரிவித்தார்.
