தங்சாவூர் ஓவியம் தயாரிக்க பயிற்சி: மகளிர் விண்ணப்பிக்க அழைப்பு
தங்சாவூர் ஓவியம் தயாரிக்க பயிற்சி: மகளிர் விண்ணப்பிக்க அழைப்பு
UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 10:31 AM
திருச்சி: வீட்டிலிருந்தே தஞ்சாவூர் ஓவியங்களை தயாரித்து வருமானம் ஈட்டும் வகையில், 100 பெண்களுக்கு ஸ்ரீரங்கத்தில் ஓராண்டு தஞ்சாவூர் ஓவிய பயிற்சி வழங்கப்பட உள்ளது.
இது குறித்து திருச்சி கலெக்டர் ஜெயஸ்ரீ அறிக்கை: தமிழகத்தில் பாரம்பரிய பெருமைகளை வெளிப்படுத்தும் கைத்திறத் தொழில்களில் தஞ்சாவூர் ஓவியங்கள் முக்கியமானது. இக்கலையை பரவலாக்கும் வகையில், வீட்டிலுள்ள மகளிர், இக்கலையை கற்று சுயமாக சம்பாதிக்கு வழிவகை செய்யும் வகையில், திருச்சி ஸ்ரீரங்கத்தில் திறன்மிக்க கைவினை கலைஞர்களை கொண்டு, 100 மகளிருக்கு தஞ்சாவூர் ஓவியங்கள் தயாரிக்கும் ஓராண்டு பயிற்சி அளிக்கப்பட உள்ளது.
அதன்படி, ஸ்ரீரங்கம் வசந்தம் கல்யாண மண்டபத்தில் தஞ்சாவூர் ஓவியம் தயாரிக்கும் ஓராண்டு பயிற்சி வகுப்பு துவங்கப்பட உள்ளது. இப்பயிற்சி வகுப்பில், 15 வயது பூர்த்தியடைந்த மகளிர் விண்ணப்பிக்கலாம்.
பயிற்சிக்குத் தேவையான மூலப்பொருள் வழங்குவதோடு 2,000ம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியில் சேர, திருச்சி பெண்களுக்கு முன்னுரிமை உண்டு.
பயிற்சி பெற விரும்பும் பெண்கள், சிங்காரத்தோப்பு மேலரண் சாலையில் உள்ள பூம்புகார் விற்பனை நிலையத்தில் அல்லது பூம்புகார் தலைமை அலுவலகம் சென்னையில் விண்ணப்பம் பெற்றோர்,(www.poompuhar.org) என்ற மின்னஞ்சலில் பதவிறக்கம் செய்தோ, பூர்த்தி செய்து, "மேலாளர், பூம்புகார் விற்பனை நிலையம், மேலரண் சாலை, சிங்காரத்தோப்பு, திருச்சி-8" என்ற முகவரிக்கு, ஜூலை, 31ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
