தொழிற்சாலை மற்றும் மூலதன சந்தை பற்றிய படிப்பு தொடக்கம்
தொழிற்சாலை மற்றும் மூலதன சந்தை பற்றிய படிப்பு தொடக்கம்
UPDATED : ஜூலை 27, 2013 12:00 AM
ADDED : ஜூலை 27, 2013 04:44 PM
மும்பை பங்கு சந்தையின் பி.எஸ்.இ., இன்ஸ்டிடியூட், பி.காம். கேப்பிடல் மார்க்கெட் படிப்பை, அறிமுகப்படுத்தி உள்ளது. இப்படிப்பை, கோவையில் தொடங்க பி.எஸ்.இ., ஒப்பந்தம் செய்துள்ளது.
மூன்று ஆண்டு கேப்பிடல் மார்க்கெட் படிப்பில், பன்டமென்டல்ஸ் ஆப் இன்வஸ்ட்மென்ட், மல்டி கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் போன்ற 10 பாடங்கள் உள்ளன. எழுத்து மற்றும் செய்முறை தேர்வின் அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கப்படும்.
நிறுவனங்களில், பணியை திறமையாக மேற்கொள்ள, மாணவர்களை இப்படிப்பு தயார் படுத்தும். தொழிற்சாலை மற்றும் மூலதன சந்தையின் (கேப்பிடல் மார்க்கெட்) தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
இதற்கான ஆசிரியர்களை, மூன்று ஆண்டு ஒப்பந்த அடிப்படையில், இன்ஸ்டிடியூட் தேர்வு செய்யும். பி.எஸ்.இ., சர்ட்டிபிகேட் தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள், இதற்கு தேர்வு செய்யப்படுவர்.
கேப்பிடல் மார்க்கெட்டில் அன்னிய நேரடி முதலீட்டின் தொழில் தேவை கருதி, மூன்று ஆண்டுகளுக்குப் முன், பல பிரிவுகளில் முதுநிலை கல்வியை பி.எஸ்.இ., இன்ஸ்டிடியூட் தொடங்கியது.
