தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி அறிக்கை அனுப்ப உத்தரவு


UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM

ADDED : ஜூலை 28, 2013 08:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM ADDED : ஜூலை 28, 2013 08:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழகத்தில் உள்ள, அரசு மற்றும் உதவி பெறும், பள்ளிகளில், உள்ளாட்சி உறுப்பினர்கள், பெற்றோர்கள், தலைமை ஆசிரியர், நலிவடைந்த பிரிவினர் உட்பட 20 உறுப்பினர் கொண்ட பள்ளி மேலாண்மை நியமிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் மாதந்தோறும், பள்ளி மேலாண்மை குழு கூட்டம் நடத்தி, அறிக்கையை, அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம், அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்கு அனுப்ப வேண்டும். பல பள்ளிகளில், இந்த கூட்டம் நடத்தப்படாமல், நடத்தியதாக அறிக்கை அனுப்பப்பட்டுள்ளதாக, கல்வித்துறைக்கு புகார் சென்றது.

இதையடுத்து, அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட ஒருங்கிணைப்பாளர், கூடுதல் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள உத்தரவில்: பள்ளி மேலாண்மை குழு கூட்டம், ஒவ்வொரு மாதமும் கடைசி வெள்ளிக்கிழமை நடத்தி, அது குறித்த அறிக்கையை, வட்டார வளமையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

கூட்டம் நடத்தவில்லை,எனில் அது குறித்த தெளிவான விளக்கத்தை அளிக்க வேண்டும். வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள், கூட்டம் நடந்தது குறித்தும், அதில் பங்கேற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி, மாவட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும்.

மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மாதத்தின் முதல் 5ம் தேதிக்குள், அந்த அறிக்கையை, மாநில திட்ட ஒருங்கிணைப்பாளருக்கு அனுப்ப வேண்டும், என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us