தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சட்ட கல்வி மாணவர்களுக்கு தலைமை நீதிபதி யோசனை

சட்ட கல்வி மாணவர்களுக்கு தலைமை நீதிபதி யோசனை

சட்ட கல்வி மாணவர்களுக்கு தலைமை நீதிபதி யோசனை


UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM

ADDED : ஜூலை 28, 2013 08:45 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM ADDED : ஜூலை 28, 2013 08:45 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்தில் உள்ள, சட்டப் பல்கலை ஒன்றின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்ற, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, சதாசிவம் பேசியதாவது: சட்டக் கல்வியை சாதாரணமாக நினைத்துவிடக் கூடாது. இதை, வெறும், பட்டப் படிப்பாக மட்டும் நினைக்கக் கூடாது.

சட்டத்தின் உதவியுடன், மற்றவர்களின் பிரச்னையைத் தீர்த்து வைப்பதற்கு உதவும், உரிமமே, சட்டக் கல்வி. சட்டப் படிப்பு முடிந்துச் செல்லும் மாணவர்கள், பணம், பயம் ஆகியவற்றுக்குப் பணிந்து, எந்த முடிவும் எடுக்கக் கூடாது.

சட்டக் கல்வியை, தங்களின் தொழிலுக்கு உதவும், வெற்றிகரமான கருவியாக மட்டும், மாணவர்கள் கருதக் கூடாது. சமூக நலத்துக்காகவும், பொருளாதார ரீதியாகப் பின்தங்கியுள்ள மக்களுக்கு அதிகாரம் கிடைக்கச் செய்யும் வழிகாட்டியாகக் கருத வேண்டும். இவ்வாறு, தலைமை நீதிபதி சதாசிவம் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us