"இருபதாம் நூற்றாண்டு பாடங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது"
"இருபதாம் நூற்றாண்டு பாடங்களால் பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது"
UPDATED : ஜூலை 28, 2013 12:00 AM
ADDED : ஜூலை 28, 2013 11:12 AM
காரைக்குடி: இருபதாம் நூற்றாண்டு பாடங்களால், மாணவர்கள் தற்போதுள்ள பிரச்னைகளை எதிர்கொள்ள முடியாது, என பல்கலை பதிவாளர் மாணிக்கவாசகம் பேசினார்.
காரைக்குடி அழகப்பா பல்கலை பாடத்திட்ட மேம்பாட்டு மையம் சார்பில், பாட திட்ட அமைப்பும், அதன் வளர்ச்சியும் குறித்த கருத்தரங்கம் பதிவாளர் மாணிக்கவாசகம் தலைமையில் நடந்தது. அவர் பேசியதாவது:
"தற்போதுள்ள உலகளாவிய போட்டியை, எதிர்கொள்ளும் வகையில், மாணவர்களின் தேவைக்கேற்ப புதுமையான பாடத்திட்டங்களையும், நெகிழ்வான பாடத்திட்டங்களையும், வழங்குவதற்கு கல்வி நிறுவனங்கள் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.
20ம் நூற்றாண்டு பாடங்களை வைத்து, மாணவர்கள் தற்போது உள்ள பிரச்னைகளை எதிர் கொள்ள முடியாது. எனவே இளங்கலை பாடத்திட்டத்தினை, உலக தர நிலைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு மாணவர்களிடையே, விஞ்ஞான திறனையும், மேலாண்மை திறனையும் ஒருங்கிணைக்க வேண்டும்.
இளங்கலை, முதுகலை பாடங்கள் செயல்முறை விளக்கத்தோடு இணைந்த கல்வியாக இருக்க வேண்டும். மாணவர்கள் நவீன கட்டமைப்பு, தொழில் நுட்ப முறைகளை பயன்படுத்தும் வகையில், பாடத்திட்டங்கள் அமைய வேண்டும்," என்றார்.
