கல்விப் பணியில் தினமலர் பங்கு மகத்தானது: ஆசிரியர்கள் புகழாரம்
கல்விப் பணியில் தினமலர் பங்கு மகத்தானது: ஆசிரியர்கள் புகழாரம்
UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 08:11 AM
ஆகஸ்ட் மாதம் நடக்க உள்ள, ஆசிரியர் தகுதி தேர்வு எழுதுவோரை ஊக்குவிக்கும் வகையில், தினமலர் நாளிதழ், ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி முகாமை, தி.நகரில் நடத்தியது. இதில் பங்கேற்ற ஆசிரியர்கள் கருத்துகள்:
மாற்றுத்திறனாளி கார்த்திக், வடபழனி: தினமலர் வழங்கிய, ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி முகாம் மிகவும் பயனுள்ளதாக அமைந்திருந்தது. நான் கடந்த இருமுறை ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி தோல்வியடைந்திருந்தேன். இப்பயிற்சி முகாம் மூலம், தேர்வில் எப்படி வெற்றி பெறுவது என்ற தேர்வு நுணுக்கங்கள் கற்று கொண்டேன். அறிவியல், உளவியல் பாடங்கள், எளிதில் புரியும்படி அமைந்திருந்தது.
நந்தினி, போரூர்: டி.இ.டி., பயிற்சி முகாம் நடத்துவது போன்று, டி.இ.டி., மாதிரி தேர்வுகளை நடத்த முன்வர வேண்டும். தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல், உளவியல் ஆகிய பாடங்கள், எளிய வகையில் புரியும் வகையில் கற்று கொடுக்கப்பட்டது.
நடராஜன், அரியலூர்: கடந்த, 2000ல், "ஜெயித்து காட்டுவாம்" நிகழ்ச்சியில் பங்கேற்றேன். தற்போது, ஆசிரியர் தகுதி தேர்வு பயிற்சி முகாமில் பங்கேற்றுள்ளேன். கல்விக்காக, "தினமலர்&' பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்துவது மகிழ்ச்சியளிக்கிறது; இப்பணி தொடர வேண்டும்.
பயிற்சி முகாமிற்கு வருவதற்கு முன், ஆசிரியர் தகுதி தேர்வு குறித்த, எந்தவித புரிதலும் இல்லாமல் வந்தேன். தற்போது, முழுமையாக தகவல்களை பெற்றுள்ளேன்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
