தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/சிவகங்கை பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

சிவகங்கை பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு

சிவகங்கை பள்ளிகளின் பராமரிப்பிற்கு ரூ.80 லட்சம் ஒதுக்கீடு


UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM

ADDED : ஜூலை 29, 2013 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM ADDED : ஜூலை 29, 2013 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சிவகங்கை: "சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி பராமரிப்பிற்காக ரூ.80.25 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளதாக," கலெக்டர் ராஜாராமன் பேசினார்.
 
சிவகங்கையில், மாவட்ட கல்வி குழு கூட்டம் நடந்தது. கலெக்டர் தலைமை வகித்து பேசுகையில், "அனைவருக்கும் கல்வி திட்ட கட்டட பணிகளை விரைந்து முடிக்கவேண்டும். கணிணி கருவிகளை பயன்படுத்தி, செயல்வழி கற்றலை கற்பிக்க வேண்டும். மாவட்டத்தில் உள்ள 1,084 அரசு பள்ளிகளுக்கு, பராமரிப்பு மானியமாக ரூ.80.25 லட்சம் ஒதுக்கப் பட்டுள்ளது.

குடிநீர் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்புகள் சரி செய்யப்படும். பள்ளி மானியமாக தொடக்கப் பள்ளிக்கு ரூ.5 ஆயிரம், நடுநிலைக்கு ரூ.7 ஆயிரம் என, 1,320 பள்ளிகளுக்கு, ரூ.92.60 லட்சம் வழங்கப்பட உள்ளது," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us