UPDATED : ஜூலை 29, 2013 12:00 AM
ADDED : ஜூலை 29, 2013 02:05 PM
* முதல் மாணவராகவோ அல்லது சராசரி மாணவராகவோ இருக்கலாம். ஆனால், உங்களது செயல்திறனில் வலிமையாக இருக்க வேண்டும்.
* சரியான வழியில் பயணம் செய்யவும், தரத்தை உயர்த்திக் கொள்ளவும், கல்லூரி பேராசிரியரை அல்லது பயிற்சி மையத்தின் உதவியை நாடலாம்.
* அன்றாடம் படிப்பதற்கு உகந்த இடத்தை, தேர்வு செய்து கொள்ளுங்கள்.
* கல்லூரியில் அதிகமான பாடப்பகுதிகள் இருப்பதால், மனப்பாடம் செய்வது பலனளிக்காது. புரிந்து கொண்டு படித்தால், எளிதாக நினைவுக்கு கொண்டு வர முடியும்.
* மன அழுத்தமும், சோர்வும் நினைவாற்றலை கெடுத்து விடும். அதனால், உடற்பயிற்சியும், சத்தான உணவும், சரியான அளவு தூக்கமும் அவசியம்.
* வகுப்புகளை ‘கட்&' அடிக்காதீர்கள். வகுப்புக்கு சென்று பாடத்தை கவனித்து குறிப்பு எடுத்துக் கொள்வது சிறப்பான பலனளிக்கும். தேர்வு சமயத்தில் குறிப்புகள் மிகவும் உதவிகரமானதாக இருக்கும்.
* ஒவ்வொரு நாளும் படிப்பதற்கான நேரத்தை திட்டமிடவும். தேர்வு காலத்திற்குரிய திட்டமிடுதலையும் முன்கூட்டியே செய்ய வேண்டியது அவசியம்.
* முக்கியமான வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொள்ள முடிகிறதா என யோசித்துப் பாருங்கள்.
* தேர்வு எழுதும் போது எளிதான வினாக்களுக்கு முதலில் விடையளியுங்கள். ஒவ்வொரு பதிலுக்கான குறிப்பிட்ட கால அளவு மிகாமல் பார்த்துக் கொள்ளுங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டும், என்பது மிகவும் முக்கியம்.
