UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 08:38 AM
காந்திகிராமம்: காந்திகிராம பல்கலையின், புது துணைவேந்தரை தேர்வு செய்ய, மூன்று பேர் கொண்ட "தேடுதல் குழு" அமைக்கப்பட்டுள்ளது. தற்போதைய துணைவேந்தர் ராமசாமியின் பதவிக்காலம், 2012 மார்ச்சில் நிறைவடைந்தது. தலா ஆறு மாதம் வீதம், மூன்று முறை பதவி நீடிப்பு செய்யப்பட்டது. செப்டம்பரில் நீடிப்பு பதவி காலமும் முடிகிறது.
துணைவேந்தரை தேர்வு செய்ய, "தேடுதல் குழு" அமைக்கப்பட்டுள்ளது. இதில், பல்கலை நிர்வாகக்குழு சார்பில், வேந்தர் நியமித்த, குஜராத் வித்யா பீடம் துணைவேந்தர் சுதர்சன அய்யங்கார், மத்திய மனித வள மேம்பாட்டு துறை நியமித்த, அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் அனந்தகிருஷ்ணன் உறுப்பினர்களாக இருப்பர்.
இவர்கள், விண்ணப்பதாரர்களில் இருந்து, மூன்று பேர் கொண்ட பட்டியலை, வேந்தர் ரீனா ஜாப்வாலாவிடம் அளிப்பர். இதில் ஒருவர் தேர்வு செய்யப்படுவார்.