சர்.தியாகராயா கல்லூரியில் "சென்னை வாரம்" கொணடாட்டம்
சர்.தியாகராயா கல்லூரியில் "சென்னை வாரம்" கொணடாட்டம்
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 10:12 AM
சென்னை: வண்ணாரப்பேட்டையில் அமைந்துள்ள சர்.தியாகராயா கல்லூரியின், முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றுத் துறை சார்பாக, சென்னை வாரம் கொண்டாடப்படவுள்ளது.
ஆகஸ்ட் 20 முதல் 22ம் தேதி வரையான தேதிகளில் இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. சென்னை நகரம் உருவாக்கப்பட்டதை குறிக்கும் வகையில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில், பல்வேறான அம்சங்கள் இடம்பெறுகின்றன.
பல்வேறு தலைப்புகளில், பலவிதமான போட்டிகள் நடைபெறுகின்றன. அவற்றின் விபரம்:
புகைப்பட கண்காட்சி (ஓவியம் மற்றும் பென்சில் தீட்டுதல்) - சென்னை அன்றும் - இன்றும்
வினாடி வினா - சென்னை நகரின் முக்கிய இடங்கள், பிரபலங்கள் மற்றும் முக்கிய நிகழ்வுகள்
மாணவர்களின் கருத்தரங்கு - வடசென்னையின் பரிணாம வளர்ச்சி
கட்டுரைப் போட்டி - விடுதலைப் போராட்டத்தில் மதராஸ் நகரத்தின் பங்கு
இப்போட்டிகள் அனைத்தும் வரலாற்றுத் துறை மாணவர்களுக்கிடையே நடத்தப்படுகின்றன.