புதுவையில் இன்று மருத்துவ சேர்க்கை இறுதி கட்ட கவுன்சிலிங் துவக்கம்
புதுவையில் இன்று மருத்துவ சேர்க்கை இறுதி கட்ட கவுன்சிலிங் துவக்கம்
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 10:44 AM
புதுச்சேரி: மருத்துவ படிப்பிற்கான இறுதி கட்ட கவுன்சிலிங், இன்று 1ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் நடக்கிறது.
காலை 9:00 மணிக்கு துவங்கும் முதல் பிரிவு கவுன்சிலிங்கில், 196.333 முதல் 84.333 வரை கட் ஆப் எடுத்த 232 பிற மாநில மாணவர்கள் பங்கேற்கின்றனர். 10:00 மணிக்கு பி.பார்ம்., படிப்பிற்கு விண்ணப்பித்த பிற மாநில மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
10:30 மணிக்கு காரைக்கால், மாகி, ஏனாம் மாணவர்களுக்கும், 11:00 மணிக்கு மீனவர், முஸ்லிம் மாணவர்களுக்கும், 12:00 மணிக்கு எஸ்.சி.,எஸ்.டி., மாணவர்களுக்கும் கவுன்சிலிங் நடக்கிறது. பொதுப்பிரிவு உள்ளிட்ட அனைத்து பிரிவு மாணவர்களுக்கு மாலை 3:00 மணிக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
இதில் கட் ஆப் மதிப்பெண் 200 முதல் 190 வரை எடுத்த 178 மாணவர்கள் பங்கேற்கின்றனர். 4:00 மணிக்கு 189.666 முதல் 184 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த 203 மாணவர்கள் பங்கேற்கின்றனர்.
நாளை 2ம் தேதி காலை 9:00 மணிக்கு கட் மதிப்பெண் 183.666 முதல் 178.222 வரை, 10:00 மணிக்கு 178 முதல் 173 வரை, 11:00 மணிக்கு 172.666 முதல் 166.333 வரை, 12:00 மணிக்கு 166 முதல் 159.666 வரை, 2:00 மணிக்கு 159.333 முதல் 152.333 வரை, மாலை 3:00 மணிக்கு 152 முதல் 143.333 வரை, 4:00 மணிக்கு 143 முதல் 133.666 முதல் 133.666 வரை எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
3ம் தேதி காலை 9:00 மணிக்கு 133.333 முதல் 123.666 வரை, 10:00 மணிக்கு 123.333 முதல் 111.666 வரை, 11:00 மணிக்கு 111.333 முதல் 93.667 வரை, 12:00 மணிக்கு 93.500 முதல் 80 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.
தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் அழைப்பு கடிதம் அனுப்பப்படவில்லை. இறுதிகட்ட கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவர்கள் சீட் எடுத்தாலும், எடுக்காவிட்டலும் 750 ரூபாய்க்கு டி.டி., அல்லது பணம் செலுத்தினால் மட்டுமே கலந்தாய்வில் அனுமதிக்கப்படுவர். எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் 300 ரூபாய்க்கு டி.டி., எடுத்தால் போதுமானது.