புதுவை அரசு கல்லூரிகளில் 5ம் தேதி வகுப்புகள் துவக்கம்
புதுவை அரசு கல்லூரிகளில் 5ம் தேதி வகுப்புகள் துவக்கம்
UPDATED : ஆக 01, 2013 12:00 AM
ADDED : ஆக 01, 2013 11:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில், வகுப்புகள் வரும் 5ம் தேதி துவங்கும் என, கப்பாஸ் கன்வீனர் வரலட்சுமி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: "ஒருங்கிணைந்த சேர்க்கை முறையின் கீழ், அரசு மற்றும் அரசு உதவி பெறும் குழும கல்லூரிகளில் சேர்க்கை ஆணை பெற்றவர்களுக்கு, வரும் 5ம் தேதி வகுப்புகள் தொடங்கப்படும்.
எனவே, ஒருங்கிணைந்த சேர்க்கை முறையின் கீழ் முதலாம் ஆண்டு சேர்ந்தவர்கள் அனைவரும் அவரவர் சேர்ந்த கல்லூரிகளுக்கு காலை 9.30க்குள் சேர்க்கை சீட்டு மற்றும் பெற்றோர்களுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.