சீனாவுக்கு உயரிய பண்பாட்டை தந்தது இந்தியா: மலேசியா பல்கலை., பேராசிரியர்
சீனாவுக்கு உயரிய பண்பாட்டை தந்தது இந்தியா: மலேசியா பல்கலை., பேராசிரியர்
UPDATED : ஆக 05, 2013 12:00 AM
ADDED : ஆக 05, 2013 11:08 AM
சிவகாசி: "சீனாவிற்கு உயரிய பண்பாட்டை தந்தவர்கள் இந்தியர்கள்," என மலேசியா புத்ரா பல்கலைக்கழக பேராசிரியர் நாராயணன் கண்ணன் கூறினார்.
சிவகாசி காளீஸ்வரி கல்லூரியில், தமிழ்துறை சார்பில் நடந்த, தென்கிழக்கு ஆசியாவில் தமிழச் சுவடுகள் பற்றிய கருத்தரங்கில் அவர், பேசுகையில், "ஓலைச்சுவடியில் இருந்து தமிழை அச்சேற்றியது, எப்படி உயர்ந்த பணியோ, அதைப் போலவே அச்சில் உள்ள தமிழை, இணையத்தில் மின் நூல்களாக மாற்றுவதும் உயர்த்த பணி.
தமிழர்கள் தங்கள் தொல்லியல் அடையாளங்களை பாதுகாக்க தவறி விட்டனர். சமணர் படுகைகள் அழிந்து வருகின்றன. மலேசியாவில் தமிழ்ச் சுவடிகளை பாதுகாத்து வருகின்றனர். மகப்பேறு, விலங்கியல், மருத்துவம் குறித்த சுவடிகள் பாதுகாக்கப்படுகின்றன.
சென்னையில் உள்ள ஒரு கோயில் சிற்பத்தை, கொரியா நாடு அதன் தேசிய சின்னமாக கொண்டுள்ளது. உலகின் மிகப்பெரிய கம்போடியாவில் உள்ள அங்கோர்வாட் இந்து கோயிலில், திருப்பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியும், மகாபாரத யுத்தத்தையும் சிற்பமாக செதுக்கி உள்ளனர்.
சீனாவிற்கு உயரிய பண்பாட்டை தந்தவர்கள் இந்தியர்கள். கொரியர் - தமிழர் உறவு வரலாற்று பாரம்பரியம் கொண்டது," என்றார்.