2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு: 2ம் நாளில் 403 பேருக்கு இடம்
2ம் கட்ட மருத்துவ கலந்தாய்வு: 2ம் நாளில் 403 பேருக்கு இடம்
UPDATED : ஆக 07, 2013 12:00 AM
ADDED : ஆக 07, 2013 08:19 AM
தமிழகத்தில் உள்ள, 18 அரசு மருத்துவக் கல்லூரிகளுக்கான முதற்கட்ட கலந்தாய்வு முடிந்த நிலையில், ஏழு பேர், மருத்துவப் படிப்பை நிராகரித்தனர். கூடுதல் இடங்கள் மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான இரண்டாம் கட்ட கலந்தாய்வு, 5ம் தேதி துவங்கியது.
முதல் நாளில், 857 பேர் கல்லூரிக்குள் இட மாறுதல் பெற்றனர். நேற்று, இரண்டாம் நாள் கலந்தாய்வு நடந்தது. கலந்தாய்வில் பங்கேற்க, 550 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது. 443 பேர் பங்கேற்றனர். இதில், அரசு மருத்துவக் கல்லூரிகள்- 161, தனியார் கல்லூரிகள்- 229, அரசு பல் மருத்துவமனை- 13 இடங்கள் என, 403 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.
அரசு மருத்துவக் கல்லூரிகள்- 187, தனியார் மருத்துவக் கல்லூரிகள்- 482, அரசு பல் மருத்துவக் கல்லூரி- 72, தனியார் பல் மருத்துவக் கல்லூரி- 937 இடங்களும் காலியாக உள்ளன. இதற்கான கலந்தாய்வு, இம்மாதம், 16ம் தேதி வரை நடக்க உள்ளது.

