UPDATED : ஆக 07, 2013 12:00 AM
ADDED : ஆக 07, 2013 08:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை: டி.இ.டி., தேர்வுக்கான ஹால் டிக்கெட், டி.ஆர்.பி., இணையதளத்தில், நேற்று மாலை வெளியிடப்பட்டது. வரும், 17, 18 ஆகிய தேதிகளில், டி.இ.டி., தேர்வு நடக்கிறது. ஏழு லட்சம் பேர், இந்த தேர்வை எழுதுகின்றனர்.
தேர்வர்களுக்கான, ஹால் டிக்கெட்டுகள், நேற்று மாலை, www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டன. தேர்வர்கள், தங்களுடைய விண்ணப்ப எண்களை பதிவு செய்து, ஹால் டிக்கெட்டை, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
தமிழக தேர்வர்கள் மற்றும் புதுச்சேரி தேர்வர்கள் என, தனித்தனியே, ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டு உள்ளது.

