தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தனியார் பள்ளி இடபிரச்னை: நிபுணர் குழு அறிக்கை தாக்கல்?

தனியார் பள்ளி இடபிரச்னை: நிபுணர் குழு அறிக்கை தாக்கல்?

தனியார் பள்ளி இடபிரச்னை: நிபுணர் குழு அறிக்கை தாக்கல்?


UPDATED : ஆக 09, 2013 12:00 AM

ADDED : ஆக 09, 2013 09:54 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 09, 2013 12:00 AM ADDED : ஆக 09, 2013 09:54 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தமிழக அரசின் புதிய விதிமுறைப்படி, ஆயிரத்திற்கும் மேற்பட்ட மெட்ரிகுலேஷன் பள்ளிகளுக்கு, போதுமான இடம் இல்லை. இந்த பிரச்னையால், சம்பந்தபட்ட பள்ளிகளுக்கு, தொடர் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, எந்த ஒரு பள்ளியும், அங்கீகாரம் இல்லாமல் செயல்படக்கூடாது. இந்த விவகாரத்தால், பிரச்னையை தீர்ப்பது குறித்து ஆய்வு செய்து, அரசுக்கு அறிக்கை தர, பள்ளிக்கல்வி இயக்குனர் தலைமையில், நிபுணர் குழு அமைக்கப்பட்டது.

பள்ளிக்கல்வி இயக்குனராக தேவராஜன் பதவி வகித்தபோது, மாநிலம் முழுவதும், பொதுமக்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளிட்ட பல தரப்பினரிடம் கருத்துக்கள் கேட்டறியப்பட்டன.

பொதுமக்கள் கருத்துக்கள் அடிப்படையிலும், மாணவர் பாதிக்காத வகையிலும், அறிக்கை தயார் செய்யப்பட்டு, தமிழக அரசிடம், அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு விட்டதாக, கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

கோடநாட்டில் இருக்கும் முதல்வர் ஜெயலலிதா, அடுத்த வாரம் சென்னை திரும்பியதும், நிபுணர் குழு அறிக்கையின் மீது, உரிய நடவடிக்கை எடுத்து, அறிவிப்பை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது.

பிரச்னைக்குரிய பள்ளிகள், 20 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்டுள்ளன. தற்போதைய நிலையில், அந்த பள்ளிகள், விரிவாக்கம் செய்ய முடியாத நிலையில் இருப்பதால், குறிப்பிட்ட பள்ளிகளுக்கு மட்டும், புதிய விதிமுறையில் இருந்து விதிவிலக்கு அளித்து, அந்த பள்ளிகள் தொடர்ந்து செயல்பட, அனுமதி வழங்கப்படும் என, தெரிகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us