தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பெண் கல்வி கற்றால் பரம்பரையே உயரும்: "தினமலர்" வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேச்சு

பெண் கல்வி கற்றால் பரம்பரையே உயரும்: "தினமலர்" வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேச்சு

பெண் கல்வி கற்றால் பரம்பரையே உயரும்: "தினமலர்" வெளியீட்டாளர் டாக்டர் ஆர்.லட்சுமிபதி பேச்சு


UPDATED : ஆக 17, 2013 12:00 AM

ADDED : ஆக 17, 2013 09:58 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 17, 2013 12:00 AM ADDED : ஆக 17, 2013 09:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை, பெரியநாயக்கன்பாளையம் ரயில்வே பீடர் ரோடு அரங்கசாமி நாயுடு மேல்நிலைப்பள்ளியில் பொன்விழா ஆண்டு நிகழ்ச்சி நடந்தது. பள்ளி செயலாளர் ஸ்ரீலதா ஜெகநாதன் வரவேற்றார். விழாவுக்கு பள்ளி கமிட்டி தலைவர் துரைசாமி தலைமை வகித்தார். பள்ளியின் பொன்விழா மலரை கவர்னர் ரோசய்யா வெளியிட, தினமலர் நாளிதழ் வெளியீட்டாளரும், பி.டி.ஐ., தலைவருமான டாக்டர் ஆர்.லட்சுமிபதி பெற்றுக் கொண்டார்.

நிகழ்ச்சியில், டாக்டர். ஆர்.லட்சுமிபதி பேசியதாவது:

"ஒருவருடைய வாழ்க்கையின் அடிச்சுவடுகள், சமுதாய பணிகளாக மாற வேண்டும். மரணத்தோடு மறந்து போகிற வாழ்க்கையாக இல்லாமல், அவருக்கு பின் வருபவர்கள் அவரது நினைவோடும், அவருடைய செயல்பாடுகளின் தொடர்போடும் வாழும் வாழ்க்கையே உண்மையான வாழ்க்கை. சராசரியாக பிறந்து சாதாரணமாக மடிவது அல்ல வாழ்க்கை; நம்முடைய சந்ததியினருக்கு அந்த வாழ்க்கை பயனுள்ளதாக இருக்க வேண்டும்.

வெறும் உழைப்பும், பொறுப்பும் ஒரு மனிதனை செல்வ நிலைக்கு உயர்த்துமே தவிர, பிறரின் வாழ்வு உயர அது எவ்விதத்திலும் பயன்படாது. பிறருடைய வாழ்க்கைக்கு அது உதவும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு குடும்பமும் உயர வேண்டுமானால், அந்த குடும்பத்தில் உள்ள பெண்கள் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். ஒரு பெண் கல்வி கற்றால் ஒரு பரம்பரையே உலகை ஆளும். தற்போது கல்விப்பணி மாறுபட்ட பாதையில் வியாபார நோக்கோடு சென்று கொண்டிருக்கிறது.

கல்வி வியாபாரமாகி வரும் இன்றைய உலகில் வசதி குறைந்த சாதாரண பெற்றோர் எவ்வாறு தங்களுடைய குழந்தைகளை படிக்க வைக்க முடியும்? கல்வி நிறுவனங்களை நானும் நடத்தி வருகிறேன். மதுரையில் எனது தாய், தந்தையார் நினைவாக பள்ளியை நடத்துகிறேன். அதில் 1200 மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.

அதே போல, மதுரையில் இருந்து 17 கி.மீ., தொலைவில் மரைன் காலேஜ் நடத்துகிறேன். எங்களது பள்ளி, கல்லூரியில் நன்கொடை எதுவும் பெறுவதில்லை. பெறுகின்ற ஒவ்வொரு தொகைக்கும் ரசீது கொடுக்கப்படுகிறது. எல்லாம் வெளிப்படையாகவே நடக்கிறது. நியாயமாக, நேர்மையாக பணியாற்றி வருகிறோம். வளர்ச்சி மெதுவானதாக இருந்தாலும், நிலையானதாக இருக்க வேண்டும். இவ்வாறு, டாக்டர் ஆர். லட்சுமிபதி பேசினார்.

விழாவில் சிறந்த ஆசிரியர்களுக்கு டாக்டர் ஆர்.லட்சுமிபதி, நினைவுப் பரிசுகள் வழங்கி கவுரவித்தார். பள்ளி நிர்வாகிகள் நாராயணசாமி, தாமோதரசாமி, கே.ஜி., தியேட்டர் உரிமையாளர் ராமகிருஷ்ணன், கே.ஜி., மருத்துவமனை டாக்டர் பக்தவச்சலம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். தலைமை ஆசிரியை மலர்விழி நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us