தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/5.65 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் பணி தீவிரம்

5.65 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் பணி தீவிரம்

5.65 லட்சம் மடிக்கணினி கொள்முதல்: டெண்டர் பணி தீவிரம்


UPDATED : ஆக 19, 2013 12:00 AM

ADDED : ஆக 19, 2013 09:24 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 19, 2013 12:00 AM ADDED : ஆக 19, 2013 09:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சட்டசபை தேர்தலின் போது, "அ.தி.மு.க., வெற்றி பெற்று, ஆட்சிக்கு வந்தால், பிளஸ் 2 மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, இலவசமாக மடிக்கணினி வழங்கப்படும்" என ஜெயலலிதா அறிவித்தார்.

அதன்படி, அ.தி.மு.க., வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்ததும், முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மாணவ, மாணவியருக்கு, இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார். மடிக்கணினி, எல்காட் நிறுவனம் சார்பில் வாங்கப்பட்டு, கல்வித் துறை மூலம், மாணவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அதேபோல், கோவில் செயல் அலுவலர்களுக்கும், மடிக்கணினி வழங்கப்பட்டு உள்ளது. இத்திட்டங்களுக்காக, 2011-12, 8.98 லட்சம், கடந்த ஆண்டு, 7.55 லட்சம் மடிக்கணினிகள் வாங்கப்பட்டன. நடப்பாண்டுக்கு, 5.65 லட்சம் மடிக்கணினி வாங்க முடிவு செய்யப்பட்டு, எல்காட் நிறுவனம் சார்பில், டெண்டர் விடப்பட்டுள்ளது.

டெண்டர் விண்ணப்பப் படிவங்கள், சென்னை நந்தனம் பகுதியில் உள்ள, எல்காட் மேலாண் இயக்குனர் அலுவலகத்தில், அடுத்த மாதம், 3ம் தேதி வரை வழங்கப்படும். விண்ணப்பங்களை பூர்த்தி செய்து, செப்., 4ம் தேதிக்குள் வழங்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us