தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/எம்.பி.ஏ., படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் நாளை நடக்கிறது

எம்.பி.ஏ., படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் நாளை நடக்கிறது

எம்.பி.ஏ., படிப்பிற்கான சென்டாக் கவுன்சிலிங் நாளை நடக்கிறது


UPDATED : ஆக 20, 2013 12:00 AM

ADDED : ஆக 20, 2013 10:32 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 20, 2013 12:00 AM ADDED : ஆக 20, 2013 10:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

புதுச்சேரி: எம்.பி.ஏ., படிப்பிற்கான முதற்கட்ட சென்டாக் கவுன்சிலிங் நாளை 21 ம் தேதி நடக்கிறது.

புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் உள்ள சென்டாக் வளாகத்தில் எம்.பி.ஏ., படிப்பிற்கான முதற்கட்ட சென்டாக் கவுன்சிலிங் நாளை 21ம் தேதி காலை 9.15 மணிக்கு துவங்குகிறது. முதல் பிரிவில் கவுன்சிலிங் விளையாட்டு வீரர், முன்னாள் ராணுவ வீரர் வாரிசு, சுதந்திரப் போராட்ட வீரர் , மாற்றுத் திறனாளிகள் பங்கேற்கின்றனர்.

9.45 மணிக்கு துவங்கும் பொதுப் பிரிவு கவுன்சிலிங்கில் 150 முதல் 71 வரை கட் ஆப் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் கலந்து கொள்கின்றனர். 11.30 மணிக்கு 70 முதல் 51 வரை, 2.00 மணிக்கு 50 முதல் 30 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்களுக்கு கவுன்சிலிங் நடக்கிறது.

பிற்பகல் 3.00 மணிக்கு எஸ்.சி., பிரிவினருக்கு கவுன்சிலிங் நடக்கிறது. இதில் 29 முதல் 15 வரை கட் ஆப் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் பங்கேற்கின்றனர்.

கவுன்சிலிங் அழைப்புக் கடிதம் தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அழைப்புக் கடிதம் கிடைக்காவிட்டாலும் மெரிட் லிஸ்ட்டில் தங்களது பெயர் இருப்பின் கவுன்சிலிங் நடக்கும் தேதி மற்றும் நேரத்தில் பங்கேற்கலாம். கவுன்சிலிங் கட்டணமாக பொதுப் பிரிவினர் 1100 ரூபாய், எஸ்.டி., பிரிவினர் 550 ரூபாய்க்கு, கன்வீனர், சென்டாக்- பி.ஜி., என்ற பெயருக்கு புதுச்சேரியில் மாற்றத்தக்க வகையில் "டிடி" எடுத்து கலந்து கொள்ளலாம்.

கவுன்சிலிங்கில் பங்கேற்கும் மாணவர்கள் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், இரண்டு செட் நகல்களையும் எடுத்து வர வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது.

தனியார் கல்லூரிகளான ராஜிவ்காந்தி, மணக்குள விநாயகர் தொழில்நுட்பக் கல்லூரி, ஆர்.வி.எஸ்., ரீஜென்சி., கிறிஸ்து ஆகிய கல்லூரிகளில் தலா 30 இடங்களும், மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் 60 இடம் என, மொத்தம் 210 எம்.பி.ஏ., இடங்கள் கவுன்சிலிங் மூலம் நிரப்பப்பட உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us