தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தெலுங்கானா விவகாரம்: 40 ஆயிரம் மாணவர்கள் இடம் பெயர்ந்தனர்

தெலுங்கானா விவகாரம்: 40 ஆயிரம் மாணவர்கள் இடம் பெயர்ந்தனர்

தெலுங்கானா விவகாரம்: 40 ஆயிரம் மாணவர்கள் இடம் பெயர்ந்தனர்


UPDATED : ஆக 22, 2013 12:00 AM

ADDED : ஆக 22, 2013 07:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 22, 2013 12:00 AM ADDED : ஆக 22, 2013 07:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஐதராபாத்: தெலுங்கானா உருவாக்க வேண்டுமென கோரி நடந்து வரும் போராட்டத்தால், இன்ஜினியரிங் உட்பட தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. சொந்த மாநிலத்தில் படித்தால், உருப்பட முடியாது என பயந்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள், வேறு மாநிலங்களில் உள்ள தொழிற்கல்லூரிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

ஆந்திராவை இரண்டாக பிரித்து, தெலுங்கானா உருவாக்க வேண்டுமென கோரி, தீவிர போராட்டம் நடந்து வந்தது. இதற்கு முடிவு கட்டும் வகையில், சமீபத்தில், மத்திய அரசு, தெலுங்கானா மாநில அறிவிப்பை வெளியிட்டது. இதன் பிறகு, ஆந்திராவில் நிலைமை மோசமாகியுள்ளது.

"ஆந்திராவை பிரிக்கக் கூடாது; ஒருங்கிணைந்த ஆந்திரா தொடர வேண்டும்" என போராட்டம் தலைதூக்கியுள்ளது. இதனால், கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் எதிர்காலம், கேள்விக்குறியாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக தொடர் போராட்டம், ஸ்டிரைக்கால், கல்லூரிகள் சரியான முறையில் செயல்படவில்லை. குறிப்பாக, இன்ஜினியரிங் போன்ற பட்டப்படிப்புகளில், இந்தாண்டுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்பட்டது.

கடலோர ஆந்திரா மற்றும் ராயலசீமா மாவட்டங்களில், இன்ஜினியரிங் கவுன்சில் பாதிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா போராட்டம் உச்சம் அடைந்த போது, மாநிலத்தில் உள்ள வசதி படைத்தவர்கள், தொழிற்படிப்புக்கு தகுதி பெற்ற தங்கள் குழந்தைகளை, வெளி மாநிலங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் அனுப்பி வைத்து விட்டனர். ஆனால், சாதாரண நடுத்தர குடும்பங்களை சேர்ந்த மாணவ, மாணவியர் தான் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கல்லூரிகளில் சேருவது ஒரு பக்கம் கஷ்டமாக இருந்தாலும், கல்லூரிகளில் சேர்ந்த மாணவ, மாணவியர், போராட்டம் காரணமாக, கல்லூரிகள் தொடர்ந்து நடைபெறாததால் பாதிக்கப்பட்டனர். அவர்கள் பாடங்களில் முழுமையான தகுதியை பெற முடியவில்லை. இதனால், பன்னாட்டு கம்பெனிகளில் வேலைக்கு சேர்வதிலும், உயர்படிப்புக்கு தகுதி பெற நடைபெறும் போட்டி தேர்வுகளில் பங்கேற்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அரசியல்வாதிகள், கட்சிகள், மாணவ, மாணவியரின் எதிர்காலத்தை பற்றி கொஞ்சம்கூட கவலைப்பட்டது மாதிரி தெரியவில்லை. இதனால், பல மாணவ, மாணவியர் தங்கள் படிப்பை தொடர்வதற்காக, வேறு மாநிலங்களில் உள்ள தொழிற்கல்லூரிகளுக்கு இடம் பெயர்ந்துள்ளனர். அந்த வகையில், 40 ஆயிரம் மாணவ, மாணவியர், வேறு மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்துள்ளனர்.

இந்தத் தகவலை, ஆந்திர மாநில தனியார் இன்ஜினியரிங் கல்லூரிகள் அமைப்பின் தலைவர் ரமேஷ் கூறியுள்ளார். மாணவர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்கும் நிறுவனங்கள், ஆந்திர கல்லூரிகளை தேர்வு செய்வதில் தயக்கம் காட்டுகின்றன. ஆந்திர பிரிவினைக்கு எதிராக, புதிதாக கிளம்பியுள்ள போராட்டத்தால், ஆந்திரா முழுவதும் தொழிற்படிப்பு படிக்கும் மாணவ, மாணவியர் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us