தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பி.எல்., படிப்பு: செப்., 2ம் வாரத்தில் கலந்தாய்வு

பி.எல்., படிப்பு: செப்., 2ம் வாரத்தில் கலந்தாய்வு

பி.எல்., படிப்பு: செப்., 2ம் வாரத்தில் கலந்தாய்வு


UPDATED : ஆக 27, 2013 12:00 AM

ADDED : ஆக 27, 2013 08:47 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2013 12:00 AM ADDED : ஆக 27, 2013 08:47 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: சட்டக் கல்விக்கான மாணவர் சேர்க்கை கலந்தாய்வு, செப்டம்பர், இரண்டாம் வாரத்தில் நடக்கிறது. மொத்தமுள்ள, 1,262 இடங்களுக்கு, 6,000 பேர் விண்ணப்பித்து உள்ளனர். பி.எல்., (ஹானர்ஸ்) சட்டப் படிப்பில் உள்ள, 60 இடங்களுக்கு, 500 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தின் கீழ், சென்னை, செங்கல்பட்டு, வேலூர், மதுரை, திருச்சி, கோவை, நெல்லை ஆகிய, ஏழு இடங்களில், அரசு சட்டக் கல்லூரிகள் செயல்படுகின்றன. இக்கல்லூரிகளில், பி.எல்., மூன்றாண்டு சட்டப் படிப்பில், 1,262 இடங்கள் உள்ளன. இப்படிப்பிற்கான விண்ணப்ப வினியோகம், ஜூலை, 10ம் தேதி முதல், ஆக., 16ம் தேதி வரை நடந்தது.

இதுகுறித்து, பல்கலைக்கழக பதிவாளர் சங்கர் கூறுகையில், ""பி.எல்., படிப்பிற்கு பெறப்பட்டுள்ள விண்ணப்பங்களில், தகுதியானவற்றை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. பி.எல்., படிப்பிற்கான தரவரிசை பட்டியல், ஆக., 31ம் தேதிக்குள் வெளியிடப்படும். செப்டம்பர், இரண்டாம் வாரத்தில் கலந்தாய்வு துவங்கும்,&'&' என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us