தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாணவர் வேலை நிறுத்தம்; ஆசிரியர்கள் உள்ளிருப்பு

மாணவர் வேலை நிறுத்தம்; ஆசிரியர்கள் உள்ளிருப்பு

மாணவர் வேலை நிறுத்தம்; ஆசிரியர்கள் உள்ளிருப்பு


UPDATED : ஆக 27, 2013 12:00 AM

ADDED : ஆக 27, 2013 10:43 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2013 12:00 AM ADDED : ஆக 27, 2013 10:43 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தஞ்சாவூர்: கல்லூரியில் அமல்படுத்தப்பட்டுள்ள ஷிப்ட் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து, தஞ்சை சரபோஜி கல்லூரி மாணவர்கள் வேலை நிறுத்தமும், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர்.

தஞ்சாவூர் மன்னர் சரபோஜி அரசு கல்லூரியில், ஷிப்ட் முறை மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, மாணவர்கள் வேலை நிறுத்தம் போராட்டமும், ஆசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டமும் நடத்தினர். இதில் மாணவர்கள் கல்லூரி வாயிலில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆசிரியர்கள் கையெழுத்திட்டு, வகுப்பறைக்கு செல்லாமல் போராட்டம் மேற்கொண்டனர்.

இதுகுறித்து மாணவர்கள், ஆசிரியர்கள் கூறியதாவது: "கல்லூரியில் காலையில் இயங்கி வந்த இளநிலை, முதுநிலை அறிவியல் வகுப்புகள், பிற்பகல் ஷிப்டுக்கு மாற்ற கல்லூரி முதல்வர் முடிவு செய்துள்ளார். இந்த ஷிப்ட் முறை, ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மாற்றப்படவுள்ளதாம். இதனால் மாணவர்களும், ஆசிரியர்களும் பாதிக்கப்படுவர். குறிப்பாக, அறிவியல் துறை மாணவர்களுக்குச் செய்முறைப் பயிற்சிகள் உள்ளன.

இந்த பயிற்சி வகுப்பு குறைந்தது, ஐந்து மணி நேரமாவது நடக்கும். எனவே, காலை ஷிப்டு என்றால் பிற்பகல் இரண்டு, மூன்று மணி வரையும், பிற்பகல் ஷிப்டு என்றால் மாலை, ஆறு, ஏழு மணி வரையும் நீடிக்க வாய்ப்புள்ளது.

வகுப்பறைகள் பற்றாக்குறையாக இருப்பதால், இந்த மாற்றம் மேற்கொள்வதாக கல்லூரி முதல்வர் கூறுகிறார். இதுபோன்ற பிரச்னைகளை தவிர்க்க, மாணவர்கள் செய்முறை பயிற்சிக்கு செல்லும்போது காலியாக உள்ள வகுப்பறைகளில் வகுப்புகள் நடத்த ஏற்பாடு செய்யலாம் என, மாற்று திட்டத்தை முதல்வரிடம் முன்வைத்தோம். அதை அவர் ஏற்காததால், இந்த போராட்டத்தை நடத்துகிறோம்." இவ்வாறு அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us