தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"தமிழகத்தில் வீதியோர சிறுவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்"

"தமிழகத்தில் வீதியோர சிறுவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்"

"தமிழகத்தில் வீதியோர சிறுவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும்"


UPDATED : ஆக 27, 2013 12:00 AM

ADDED : ஆக 27, 2013 11:16 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : ஆக 27, 2013 12:00 AM ADDED : ஆக 27, 2013 11:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திருநெல்வேலி: தமிழகத்தில் வீதியோர சிறுவர்கள் இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என பாளை.,யில் நடந்த முகாமில் சட்டஉதவி மைய நீதிபதி தமிழரசி பேசினார்.

நெல்லை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு, நெல்லை சமூக பாதுகாப்புத்துறை மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களோடு இணைந்து "சாலையோர சிறார்களுக்கான புனரமைப்பு" முகாம் பாளை.,யில் நேற்று நடந்தது. சட்ட உதவி மைய நீதிபதி தமிழரசி தலைமை வகித்து பேசியதாவது:

"சாலையோர சிறார்கள், இளைஞர் நீதி பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் 2000 திருத்தப்பட்ட சட்டம் 2006 பிரிவு 2 டி,.யின்படி பாதுகாக்கப்பட வேண்டியவர்கள். வீட்டைவிட்டு வெளியேறும் சிறுவர்கள், தெருவோரங்களில் சுற்றித்திரிந்து குழந்தை தொழிலாளர்களாகவும், பிச்சை எடுப்பவர்களாகவும், போதைக்கு அடிமையாவதும், சமூக விரோதிகளுடன் சேர்ந்து மாறுபட்ட குணமுடையவர்களாக மாறிவிடுகிறார்கள்.

இதில் குழந்தைகளின் உரிமைகள் மறுக்கப்பட்டு, பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்கப்படுகின்றனர். சாலையோர பெண் குழந்தைகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாகுகின்றனர். சாலையோர குழந்தைகளை பாதுகாக்கவும், அவர்களின் வாழ்க்கையை புனரமைக்க அரசு பல்வேறு திட்டங்களை செய்து வருகிறது.

சாலையோரத்தில் சிறார்களை கண்டால் இலவச போன் நம்பர் 1098 நம்பரை தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்க வேண்டும். பொதுமக்களும், தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மற்றும் குழந்தை நல தொண்டு நிறுவனங்களும் வீதியோர சிறுவர்கள் இல்லாத நிலையை தமிழகத்தில் உருவாக்க வேண்டும்." இவ்வாறு அவர் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us