தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/வளர்ந்து வரும் துறை: "சைபர் லா"

வளர்ந்து வரும் துறை: "சைபர் லா"

வளர்ந்து வரும் துறை: "சைபர் லா"


UPDATED : செப் 01, 2013 12:00 AM

ADDED : செப் 01, 2013 02:31 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 01, 2013 12:00 AM ADDED : செப் 01, 2013 02:31 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இதை பயில்வதன் மூலம், சைபர் உலகையும், அதில் ஏற்படும் குற்றங்களையும் தெரிந்து கொண்டு, தீர்வு ஏற்படுத்தத் தேவையான அறிவை வளர்த்துக் கொள்ளலாம். படித்த பின், சைபர் குற்றங்களுக்கும், சமூக ஊடகங்கள், மின்னணு சாதனங்கள், டொமைன் மோதல்கள், பாதுகாப்பு மற்றும் சொத்துப் பிரச்சனைகளுக்கும், டேட்டா பாதுகாப்பு மற்றும் பிரைவசி பிரச்சனைகளுக்கும் சட்டபூர்வ ஆலோசனை வழங்கலாம்.

ஹேக்கிங் மற்றும் பணப்பரிமாற்ற மோசடி குற்றங்கள் இன்டர்நெட்டில் அதிகரித்துக் கொண்டிருக்கும் இன்றைய நாளில், சைபர் லா எக்ஸ்பர்ட்டுக்கு வேலை வாய்ப்பும் அதிகரித்துக் கொண்டு செல்கிறது. சைபர் லா எக்ஸ்பர்ட் ஆகி, முழு நேர பணிபுரிபவர்கள் மட்டுமன்றி, கோர்ட்டுக்கு சென்று வரும் வக்கீல்களும், கிடைக்கும் ஓய்வு நேரத்தில், இன்டர்நெட் வழியாக சட்ட ஆலோசனை வழங்கலாம்.

கல்வித் தகுதிகள்

பிளஸ் 2க்கு பின், 5 வருட சட்டப் படிப்பை படித்தவர்கள், டிகிரி முடித்த பின், 3 வருட சட்டம் பயின்றவர்களும் விண்ணப்பிக்கலாம். கம்ப்யூட்டர் கையாள தெரிந்தவர்களும், நவீன தொழில்நுட்ப வளர்ச்சி சார்ந்த அறிவினைப் பெற்றவராகவும் இருக்க வேண்டும்.

வழங்கும் கல்வி நிறுவனங்கள்

ஐ.எல்.ஐ.,(Indian Law Institute), டில்லி.
நல்சர் சட்டப் பல்கலை., செகந்திராபாத்.
இக்னோ (Indira Gandhi National Open University), டில்லி.
பேகுல்டி ஆப் லா யுனிவர்சிட்டி, டில்லி.

மேலும் விவரங்களுக்கு

www.ili.ac.in/addonline.htm
www.nalsarpro.org/cl_cc.htm
www.ignou.ac.in/ignou/aboutignou/school/sol/programmes/detail/37/2
www.du.ac.in/index.php?id=344

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us