தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலையில் அலைக்கழிக்கப்பட்ட எம்.பில்., மாணவர்கள்

அழகப்பா பல்கலையில் அலைக்கழிக்கப்பட்ட எம்.பில்., மாணவர்கள்

அழகப்பா பல்கலையில் அலைக்கழிக்கப்பட்ட எம்.பில்., மாணவர்கள்


UPDATED : செப் 07, 2013 12:00 AM

ADDED : செப் 07, 2013 09:13 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 07, 2013 12:00 AM ADDED : செப் 07, 2013 09:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: அழகப்பா பல்கலை தமிழ்த் துறை தலைவர், பேராசிரியருக்கு இடையே உள்ள பனிப்போரால், எம்.பில்., மாணவர்களுக்கு, வாய்மொழித் தேர்வு (வைவா) நடக்கவில்லை.

அழகப்பா பல்கலை தமிழ்துறையில், 2012-13 ல், 32 மாணவர்கள், எம்.பில்., படிப்பில் சேர்ந்தனர். இவர்களுக்கான வாய்மொழித் தேர்வு, துறைத் தலைவர் பாண்டி தலைமையில், நேற்று முன்தினம் நடந்தது. இதில் பங்கேற்பதற்கு முன், மாணவர்களுக்கு உள்மதிப்பீடு மதிப்பெண் வழங்க வேண்டும்.

உதவி பேராசிரியர் கணநாதன் வழிகாட்டியாக செயல்பட்ட, ஆறு மாணவர்களுக்கு, இந்த மதிப்பெண் வழங்கப்படவில்லை. இதனால், இம்மாணவர்களுக்கு வாய்மொழித் தேர்வு நடக்கவில்லை. பேராசிரியர் கணநாதனிடம், மாணவர்கள் கேட்டபோது, "துறைத் தலைவரை என்னிடம் வந்து கேட்க சொல்லுங்கள்" என கூறியுள்ளார்.

இப்பிரச்னையில் தலையிட துறைத்தலைவர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி ஆகியோர் மறுத்துவிட்டனர்; இதனால், மாணவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். மாணவர்கள் கூறுகையில், "பேராசிரியர்களுக்குள்  ஈகோ ஏற்பட்டு, எங்களை அலைக்கழிக்கின்றனர். தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி உதயசூரியனிடம் சென்றால், "எனக்கு தெரியாது" என ஒதுங்குகிறார்" என்றனர்.

பேராசிரியர் கணநாதன் கூறுகையில்,  "வாய்மொழித் தேர்வு நடத்துவது பற்றி, எனக்கு எதுவும் தெரியாது. துறைத் தலைவரிடம் தான் கேட்க வேண்டும்" என்றார்.

துறைத் தலைவர் பாண்டியிடம் கேட்டபோது, "பல்கலை தேர்வாணையரிடம், மாணவர்கள் புகார் செய்துள்ளனர். அவரது ஆலோசனைப்படி, அடுத்த நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார். பதிவாளர் மாணிக்கவாசகம் கூறுகையில், "விசாரணைக்கு பிறகே, வாய்மொழித்தேர்வு நடத்தப்படும்" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us