தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகள்

அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகள்

அடிப்படை வசதிகள் செய்யப்படாமல் நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகள்


UPDATED : செப் 08, 2013 12:00 AM

ADDED : செப் 08, 2013 11:15 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2013 12:00 AM ADDED : செப் 08, 2013 11:15 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தேனி: அடிப்படை வசதிகள் எதுவும் செய்யப்படாமல் அவசர அவசரமாக நடந்து முடிந்த விளையாட்டு போட்டிகளால், மாணவ-மாணவிகள அவதிப்பட்டனர்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், தேனி மாவட்ட பிரிவு சார்பில், மாவட்ட அளவிலான மாதாந்திர விளையாட்டு போட்டிகள் நடந்தது. இதில், தடகளம் மற்றும் குழு விளையாட்டு போட்டிகள், ஓட்டப் பந்தயங்கள், உயரம் தாண்டுதல், குண்டு எறிதல், தட்டு எறிதல், ஈட்டி எறிதல் நடந்தன.

குழு போட்டியாக கையுந்து பந்து போட்டி நடந்தது. இதே இடத்தில், மாவட்ட அளவிலான பூப்பந்து போட்டியும் நடைபெற்றது. மேலும் 5 ம் வகுப்பு வரை, 6 முதல் பிளஸ் 2 வரை என இரண்டு பிரிவுகளில் கேரம் போட்டிகள் நடைபெற்றன. இரண்டு பிரிவுகளில் மாணவ-மாணவியருக்கு சைக்கிள் போட்டிகள் நடந்தது.

சில போட்டிகளைத் தவிர, மற்ற போட்டிகள் அனைத்திலும் வயது வரம்பின்றி அனைவரும் பங்கேற்கலாம். காலை 8 மணிக்கு பெயர் பதிவுடன் போட்டிகள் துவங்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

மேலும், பள்ளி மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் என சுமார் 800 பேர் வந்திருந்தனர். பல்வேறு போட்டிகளும் ஒரே நாளில் காலையில் துவங்குவதாகவும், ரொக்கப்பரிசும் அறிவிக்கப்பட்டிருந்ததால், மாணவர்கள் காலை 7 மணிக்கு வந்துவிட்டனர். போட்டிகள் மாலை வரை நடந்தன. மாணவ, மாணவியர் பொதுமக்கள் என அதிகமானோர் இருந்தனர்.

இவர்களுக்கு மதிய உணவு, டீ,காபி மற்றும் கழிப்பறை வசதி உள்ளிட்ட எந்த வித வசதியும் செய்து தரப்பட வில்லை. இதனால், ஆர்வமுடன் வந்த மாணவர்கள் சோர்வுடன் திரும்பி சென்றனர். ஒரு வழியாக விளையாட்டு போட்டிகள் முடிந்துவுடன் தப்பித்தோம், பிழைத்தோம் என்ற உணர்வுடன் சென்றனர்.

ஒரே நாளில் அனைத்து விளையாட்டு போட்டிகளையும் நடத்துவதாக அறிவித்துவிட்டு, உணவு, கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுக்கு ஏற்பாடு செய்யாமல், அவசர அவசரமாக விளையாட்டு போட்டிகளை நடத்தி முடித்தது ஏன் என்ற காரணம் தெரியவில்லை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us