தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாவட்ட செஸ் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் திணறல்

மாவட்ட செஸ் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் திணறல்

மாவட்ட செஸ் போட்டி: அரசுப் பள்ளி மாணவர்கள் திணறல்


UPDATED : செப் 08, 2013 12:00 AM

ADDED : செப் 08, 2013 11:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 08, 2013 12:00 AM ADDED : செப் 08, 2013 11:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காரைக்குடி: கல்வி மாவட்ட அளவில் நடத்தப்படும் செஸ்போட்டியில், அரசு பள்ளிகளுடன், மெட்ரிக்., பள்ளி மாணவர்களும் இணைந்து பங்கேற்றதால், அரசு பள்ளி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

அரசு பள்ளி மாணவர்களின், அறிவாற்றலை பெருக்க செஸ் விளையாட்டுக்கான உபகரணங்கள் அரசு சார்பில் வழங்கப்பட்டது. இவர்களுக்கு ஒன்றிய அளவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு போட்டிகள் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்கள் மாவட்ட அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட்டனர்.

தேவகோட்டை கல்வி மாவட்ட அளவிலான, எட்டு ஒன்றியத்தை சேர்ந்த மாணவர்களுக்கான, போட்டி நேற்று காரைக்குடியில் நடந்தது. 11, 14, 17 வயதுக்குட்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். ஒன்றிய அளவில் அரசு பள்ளி மாணவர்கள் மட்டுமே பங்கேற்றனர்.

ஆனால் நேற்று நடந்த கல்வி மாவட்ட அளவிலான போட்டியில், மெட்ரிக்., பள்ளி மாணவர்களும் இணைந்து பங்கேற்றனர். மெட்ரிக்., பள்ளி மாணவர்களின் இணைப்பால், அரசு பள்ளி மாணவர்கள் போட்டியில் பின்னடைவையே சந்தித்தனர்.

போட்டியில் பங்கேற்ற அரசுப் பள்ளி மாணவர் கூறும்போது: "செஸ் போட்டியை இந்த ஆண்டு முதல் தான் விளையாடி வருகிறோம். மெட்ரிக்., பள்ளி மாணவர்களோடு சேர்த்து நடத்தியது எங்களை மனதளவில் பாதித்து விட்டது" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us