தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/மாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது?

மாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது?

மாந­க­ராட்சி பள்­ளிக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைப்­பது எப்­போது?


UPDATED : செப் 11, 2013 12:00 AM

ADDED : செப் 11, 2013 08:48 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 11, 2013 12:00 AM ADDED : செப் 11, 2013 08:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: எர்­ணா­வூரில் சென்னை மாந­க­ராட்சி உயர்­நிலை பள்­ளியில் படிக்கும் மாணவ, மாணவி­ய­ருக்கு சுகா­தா­ர­மான குடிநீர் கிடைக்­கா­ததால், பயன்­படுத்த முடி­யாத நிலத்­தடி நீரை குடிக்கின்­றனர்.

திரு­வொற்­றியூர் மண்டலம், சென்னை மாந­க­ராட்சி நான்­கா­வது வார்டில் சென்னை மாநக­ராட்சி உயர்­நிலை பள்ளி எர்­ணாவூரில் உள்­ளது. பள்ளி வளா­கத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்­நிலை பள்ளி, அங்­கன்­வாடி மையங்கள், தனித்­த­னி­யாக செயல்­படு­கின்­றன. மொத்தம், 550 பேர் வரை படிக்கும் அந்த வளா­கத்தில் குடிக்க குடிநீர் வசதி இல்லை. இதனால், மாணவ, மாண­வியர் தமது வீடு­க­ளி­லி­ருந்தே பாட்­டில்­களில் தண்ணீர் எடுத்து வருகின்­றனர்.

சத்­து­ணவு மற்றும் அங்கன்­வாடி மையத்­திற்கு தேவை­யான தண்ணீர் கிடைக்­கா­ததால், தெரு தெரு­வாக பணி­யா­ளர்கள் குடங்­க­ளுடன் அலைகின்றனர். இதுகுறித்து பெயர் கூற விரும்­பாத பள்ளி ஆசிரியை ஒருவர் கூறுகையில், "குடிநீர் வசதி இல்­லா­ததால், வெகு­தொ­லை­வி­ல் இ­ருந்து வரும் மாணவ, மாண­வியர் மிகவும் சிர­மப்­ப­டு­கின்­றனர். நிலத்­தடி தண்ணீர் உப்­பாக இருப்­பதால், பயன்­ப­டுத்த முடி­ய­வில்லை" என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us