தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தினமலர் செய்தி எதிரொலி: 3 பல்கலை தேர்வுக் குழுவிற்கு பிரதிநிதிகள் அறிவிப்பு

தினமலர் செய்தி எதிரொலி: 3 பல்கலை தேர்வுக் குழுவிற்கு பிரதிநிதிகள் அறிவிப்பு

தினமலர் செய்தி எதிரொலி: 3 பல்கலை தேர்வுக் குழுவிற்கு பிரதிநிதிகள் அறிவிப்பு


UPDATED : செப் 19, 2013 12:00 AM

ADDED : செப் 19, 2013 09:14 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 19, 2013 12:00 AM ADDED : செப் 19, 2013 09:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: காரைக்குடி, சேலம், திருச்சி பல்கலைகளில், புதிய துணைவேந்தரை தேர்வு செய்யும் குழுவில் இடம் பெறும் அரசுப் பிரதிநிதிகளை, தினமலர் செய்தி எதிரொலியாக, தமிழக அரசு நியமித்துள்ளது.

தினமலர் நாளிதழில் நேற்று "தலை இல்லாமல் தவிக்கும் தமிழக பல்கலைகள்" என்ற செய்தியில், பல்கலைகளில் துணைவேந்தர் தேர்வுக்குழுவில் இடம் பெற வேண்டிய அரசு பிரதிநிதிகள் மட்டும் நியமிக்கப்படாமல் உள்ளதாகவும், இதனால் புதிய துணைவேந்தர்கள் தேர்வுப்பணி தாமதம் ஆவதாகவும் குறிப்பிடப்பட்டது.

இதையடுத்து, தேர்வுக்குழுவில் இடம் பெறும் அரசு பிரதிநிதிகளாக, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கு சென்னை பல்கலை முன்னாள் துணைவேந்தர் எஸ்.டி.தியாகராஜன், சேலம் பெரியார் பல்கலைக்கு மதுரை காமராஜ் பல்கலை முன்னாள் துணைவேந்தர் ஆளுடையபிள்ளை, திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கு தமிழ்நாடு உயர்கல்வி மன்ற உறுப்பினர் செயலர் கரு.நாகராஜனை நியமித்து உயர்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், புதிய துணைவேந்தர்கள் தேர்வு விரைவில் முடியும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us