தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அழகப்பா பல்கலையில் புதிய துணைவேந்தர் தேர்வுக்கு குழு அமைப்பு

அழகப்பா பல்கலையில் புதிய துணைவேந்தர் தேர்வுக்கு குழு அமைப்பு

அழகப்பா பல்கலையில் புதிய துணைவேந்தர் தேர்வுக்கு குழு அமைப்பு


UPDATED : செப் 21, 2013 12:00 AM

ADDED : செப் 21, 2013 10:18 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 21, 2013 12:00 AM ADDED : செப் 21, 2013 10:18 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: காரைக்குடி அழகப்பா பல்கலை துணைவேந்தர் பதவிக் காலம் செப்., 22ம் தேதியோடு முடிவடைகிறது. இதையடுத்து, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, துணைவேந்தர் தேர்வு குழு அமைக்கப்பட்டுள்ளது.

காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக துணைவேந்தர் சேது சுடலை முத்து. இப்பதவியில் 2010 செப்டம்பர் 21ம் தேதி பதவியேற்றார். இவரின் பதவிக் காலம், செப்டம்பர் 22ம் தேதியோடு முடிவடைகிறது. துணைவேந்தர் பதவிக் காலம் முடிவடைவதற்கு மூன்று மாதங்களுக்கு முன் புதிய துணைவேந்தரைத் தேர்வு செய்ய, குழு அமைக்கப்படும்.

இதையடுத்து, காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகத்திற்கு, புதிய துணைவேந்தரை தேர்வு செய்ய, ஐவர் குழுவை அரசு அமைத்துள்ளது. அதில், கவர்னர் பிரதிநிதியாக சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் தியாகராஜன், அரசு பிரதிநிதியாக தமிழ்நாடு விளையாட்டு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் திருமலைசாமி, சிண்டிகேட் பிரதிநிதிகளாக மதுரை காமராஜ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஆவுடையப்பிள்ளை மற்றும் தியாகராஜர் பொறியியல் கல்லூரி தலைவர் கண்ணன், செனட் பிரதிநிதியாக காந்தி கிராம கிராமிய நிறுவன முன்னாள் துணைவேந்தர் ஓசா உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இக்குழு, பேராசிரியர், முன்னாள் துணைவேந்தர், கல்வியாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை பெற்று, துணைவேந்தர் பதவிக்கு தகுதியான, மூவர் பெயரை கவர்னருக்கு பரிந்துரைக்கும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us