தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இலவச பஸ் பாஸ் வழங்கியதில் நிலுவை ரூ.1,360 கோடி

இலவச பஸ் பாஸ் வழங்கியதில் நிலுவை ரூ.1,360 கோடி

இலவச பஸ் பாஸ் வழங்கியதில் நிலுவை ரூ.1,360 கோடி


UPDATED : செப் 24, 2013 12:00 AM

ADDED : செப் 24, 2013 08:20 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 24, 2013 12:00 AM ADDED : செப் 24, 2013 08:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னை: அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டதன் மூலம், போக்குவரத்துத்துறைக்கு, 14 ஆண்டில், 1,360 கோடி ரூபாய், பள்ளிக்கல்வித் துறை வழங்க வேண்டியுள்ளது. அவற்றை செலுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுத்தால், போக்குவரத்து கழகத்தை நஷ்டத்தில் இருந்து காப்பாற்ற முடியும் என, தொழிற் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர்.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில், 1.30 லட்சம் டிரைவர், கண்டக்டர்களுடன், 22 ஆயிரம் பஸ்கள் நாள்தோறும் இயக்கப்பட்டு வருகின்றன. அதன் மூலம், தினசரி, 21 கோடியே, 46 லட்சம் ரூபாய் அளவில் வருவாய் கிடைக்கிறது. டீசல் விலையேற்றத்தால், போக்குவரத்து கழகத்துக்கு கிடைக்க வேண்டிய லாபம் குறைந்து கொண்டே போகிறது. இதனால், ஆண்டுக்கு, 200 கோடி ரூபாய் அளவில் நஷ்டம் ஏற்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில், போக்குவரத்து கழகங்களை மேம்படுத்த, அரசு சார்பில், 450 கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. தமிழகத்தில், அதுபோன்ற மானியம் இல்லாததால், பஸ் இயக்குதல் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டே, மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டி உள்ளது.

இப்பிரச்னை ஒருபுறமிருக்க, பள்ளி, மாணவ, மாணவியருக்கு இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டதன் மூலம், 14 ஆண்டுகளில், போக்குவரத்து கழகங்களுக்கு, 1,360 கோடி ரூபாய் அளவிலான தொகையை, பள்ளிக்கல்வித் துறை வழங்காமல் உள்ளதாக, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தகவல் பெறப்பட்டுள்ளது. அந்த தொகையை, அரசு செலுத்தும் பட்சததில், நஷ்டத்தில் உள்ள போக்குவரத்து கழகம் புத்துயிர் பெறும் என, கூறப்படுகிறது.

போக்குவரத்து கழக ஊழியர் சம்மேளனம் (சி.ஐ.டி.யூ.,) மாநில துணை தலைவர் அன்பழகன் கூறியதாவது: சென்னை மாநகரில், இலவச பஸ் பாஸுக்காக, ஒரு நபருக்கு, 1 ரூபாயும், மற்ற மாவட்டங்களில், 56 காசும், போக்குவரத்து கழகத்துக்கு வழங்க வேண்டும். பள்ளிக்கல்வித் துறை, 14 ஆண்டுகளாக, அதற்குரிய பணத்தை செலுத்தாமல் உள்ளது. இதன் மூலம், தற்போது, 1,360 கோடி ரூபாய் பாக்கி இருப்பதாக, தகவல் உரிமை சட்டத்தில் அறிக்கை வாங்கியுள்ளோம்.

இந்த பணம் வந்தாலே, போக்குவரத்து கழகங்களை நஷ்டத்தில் தள்ளாமல் பார்த்து கொள்ள முடியும். தமிழக முதல்வர், இதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்பதே, அனைத்து தொழிற்சங்கத்தினரின் விருப்பம். இவ்வாறு அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us