சென்னை பல்கலையில் விதிமீறி பதவி உயர்வு: தணிக்கை துறை சுட்டிகாட்டியும் பலனில்லை
சென்னை பல்கலையில் விதிமீறி பதவி உயர்வு: தணிக்கை துறை சுட்டிகாட்டியும் பலனில்லை
UPDATED : செப் 25, 2013 12:00 AM
ADDED : செப் 25, 2013 08:37 AM
சென்னை பல்கலைக்கழக அலுவலர் பேரவை பொதுக்கூட்டம், சமீபத்தில் பல்கலைக்கழக வளாகத்தில் நடந்தது. இதுகுறித்து, அலுவலர் பேரவை பொது செயலர் சுரேஷ் கூறியதாவது:
கடந்த, 30 ஆண்டுகளாக, நிர்வாக அலுவலர்களுக்கு கிடைக்க வேண்டிய உதவி பதிவாளர், துணை பதிவாளர் உள்ளிட்ட நியாயமான பதவி உயர்வு மறுக்கப்பட்டு வருகிறது. சிண்டிகேட் கூட்டத்தில், ஆசிரியர்களுக்கு ஒரு நீதியும், நிர்வாக அலுவலர்களுக்கு ஒரு நீதியும் வழங்கப்படுகிறது. இந்த மாற்றாந்தாய் மனப்பான்மையை கைவிட வேண்டும்.
சென்னை பல்கலைக்கழக ஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டுள்ள, பல்வேறு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு மீது, தணிக்கை துறை குழுவின் ஆட்சேபனை மதிக்கப்படுவதில்லை. இதனால், பல்கலைக்கழகத்திற்கு ஏற்பட்டுள்ள நிதிச்சுமை தொடர்பாக, தமிழக அரசுக்கு விரைவில் மனு அனுப்ப உள்ளோம்.
இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்., 30ம் தேதி முதல் அக்., 4ம் தேதி வரை, நுழைவாயிலில் முழக்க போராட்டமும், அக்., 7ம் தேதி முதல், 10ம் தேதி வரை, கறுப்பு பேட்ஜ் அணிந்தும், 11ம் தேதி, ஒரு நாள் அடையாள உண்ணாவிரத போராட்டமும் நடத்த உள்ளோம். இவ்வாறு, சுரேஷ் கூறினார்.
