தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/"கோவைக்கு விரைவில் சிவில் சர்வீசஸ் தேர்வு மைய அந்தஸ்து"

"கோவைக்கு விரைவில் சிவில் சர்வீசஸ் தேர்வு மைய அந்தஸ்து"

"கோவைக்கு விரைவில் சிவில் சர்வீசஸ் தேர்வு மைய அந்தஸ்து"


UPDATED : செப் 25, 2013 12:00 AM

ADDED : செப் 25, 2013 08:39 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 25, 2013 12:00 AM ADDED : செப் 25, 2013 08:39 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: "சிவில் சர்வீசஸ் முதல் நிலை தேர்வு மையமாக, கோவை விரைவில் அறிவிக்கப்படும்" என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய (ஸ்டாப் செலக்ஷன் கமிஷன்) மண்டல இயக்குனர்களுக்கான கலந்தாய்வு கூட்டம், கோவையில் நடந்தது. இதில் பங்கேற்ற மத்திய பணியாளர் நலன் சீர்திருத்தத்துறை அமைச்சர் நாராயணசாமி பேசியதாவது:

மத்திய அரசின் பல துறையிலுள்ள பி, சி, டி பிரிவு பணியாளர்களை, எழுத்துத் தேர்வு மூலம் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தேர்வு செய்கிறது. 2009 ம் ஆண்டு வரை 10 லட்சம் விண்ணப்பங்கள் தேர்வாணையத்துக்கு வந்தன. 2012-2013 ம் ஆண்டில் ஒரு கோடியே 60 லட்சம் விண்ணப்பங்கள் வந்தன. இதிலிருந்து பிரசார்பாரதி, மத்திய உணவுக் கழகம் உள்ளிட்ட துறைகளுக்கு 85,000 பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

தற்போது ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை அறிமுகமாகியுள்ளது. 85 சதவீத விண்ணப்பங்கள் இம்முறையிலேயே வந்து சேருகிறது. 15 சதவீத விண்ணப்பங்கள் மட்டுமே தபாலில் வந்து சேருகிறது. 2013-2014, 2014-2015 ம் ஆண்டுகளில் 2 கோடி விண்ணப்பங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிலிருந்து 2 லட்சம் பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவர்.

தேர்வுக்கான விடைகள், ஸ்டாப் செலக்ஷன் கமிஷனின் வெப்சைட்டில் மறுநாள் வெளியிடப்படுகிறது. தேர்வு எழுதும் போதே, விடைத்தாளின் நகல், தேர்வு எழுதுவோருக்கு வழங்கப்படுகிறது. மத்திய அரசுத் தேர்வாணையம் வெளிப்படையான நடைமுறையை மேற்கொள்கிறது. விண்ணப்பக் கட்டணம் செலுத்துவதற்கு, சில தேசிய வங்கிகளுடன் ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இதில் சில சமயங்களில் ஏற்படும் சைபர் கிரைம் புகார்களை சரிசெய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிவில் சர்வீசஸ் தேர்வுக்கான முதல் நிலை தேர்வு மையம், தற்போது சென்னை மற்றும் மதுரையில் மட்டுமே உள்ளது. கல்வி நகரம் என்ற பெயர் பெற்ற கோவையும் விரைவில் தேர்வு மையமாக அறிவிக்கப்படும். இவ்வாறு, அமைச்சர் நாராயணசாமி கூறினார்.

கலந்தாய்வு கூட்டத்தில் ஸ்டாப் செலக்ஷன் கமிஷன் தலைவர் பட்டாச்சார்யா, மண்டல இயக்குனர்கள் மந்திராகுப்தா, மனோகர் ஜோஷி, மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணைய உறுப்பினர் சர்மா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us