தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பிரச்னைகளால் திசைமாறும் மாணவர்கள் "கவுன்சிலிங்" முகாமில் தகவல்

பிரச்னைகளால் திசைமாறும் மாணவர்கள் "கவுன்சிலிங்" முகாமில் தகவல்

பிரச்னைகளால் திசைமாறும் மாணவர்கள் "கவுன்சிலிங்" முகாமில் தகவல்


UPDATED : செப் 26, 2013 12:00 AM

ADDED : செப் 26, 2013 10:17 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 26, 2013 12:00 AM ADDED : செப் 26, 2013 10:17 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: "சூழ்நிலைகள், பிரச்னைகளால் தான் மாணவர்கள் திசைமாறுகின்றனர்" என, கல்லூரி முதல்வர்களுக்கான கவுன்சிலிங் முகாமில், மனநல டாக்டர் ராமசுப்ரமணியன் பேசினார்.

மதுரை மாவட்ட நிர்வாகம் நடத்திய முகாமில் அவர் பேசியதாவது: எந்த மாணவரும் பிறக்கும் போதே, அறிஞர்களாகவோ, சமூக விரோதிகளாகவோ பிறப்பதில்லை. சூழ்நிலைகள் தான் வழிகாட்டிகளாக மாறுகின்றன. குடும்பம் தான் முதல் பிரச்னையை சந்திக்கிறது. பிடிக்காத துறைக்கு, படிப்புக்கு வற்புறுத்துவதால் மனநலம் பாதிக்கப்படுகிறது.

சக தோழர்கள் மூலம் மாணவர்கள் தவறான பாதைக்குச் செல்கின்றனர். ஒரு மாணவன் மோசமான நடத்தையுடன் இருந்தால், அந்த வகுப்பறையே பாதிக்கப்படலாம். ஆசிரியர்களும் முறையாக வழிகாட்டுவதில்லை. மதிப்பெண்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம், நல்வழிப்படுத்துவதற்கு தருவதில்லை. மாணவர்கள் வீட்டில் இருக்கும் நேரம் குறைவு.

ஆசிரியர்கள், இத்தகைய மாணவர்களை அடையாளம் கண்டு, "கவுன்சிலிங்" மூலம் இயல்பான வாழ்க்கைக்கு அழைத்துவர வேண்டும். அதற்காகவே, மதுரையை முன்மாதிரியாகக் கொண்டு, அனைத்து கல்லூரிகளிலும் "கவுன்சிலிங்" மையம் அமைக்கப்படுகிறது. திறமையான பேராசிரியர்களுக்கு தொடர்ந்து "கவுன்சிலிங்" பயிற்சி தரப்படும், என்றார்.

கல்லூரி கல்வி இணை இயக்குனர் சீத்தாலட்சுமி பேசுகையில், "மாணவர்களின் கற்கும் முறை நிறையவே மாறுபட்டுள்ளது. கல்வி நிலையங்கள் தான் நல்ல பழக்கவழக்கங்களை கற்றுத்தர வேண்டும். மாணவர்கள் ஐந்து நிமிடம் தாமதமாக வந்தால் கூட, வெளியே நிற்கவைத்து பாடத்தை கவனிக்க விடாமல் செய்கிறோம்.

இரவில் வெளியே சென்றால், "டாஸ்மாக்" கடைகளில் இளையோர் கூட்டம் தான் அதிகமாக உள்ளது. இந்நிலை மாற வேண்டும்," என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us