தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பயோடெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்பு குறைவா?

பயோடெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்பு குறைவா?

பயோடெக்னாலஜி துறையில் வேலை வாய்ப்பு குறைவா?


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்நிகழ்ச்சியில் ஏராளாமான மாணவர்களும், பெற்றோரும் தங்களது சந்தேகளை கேட்டு தெளிவு பெற்றனர்.
மாணவர்கள், பெற்றோரது கேள்விகளும், அதற்கு மனிதவள மறுமலர்ச்சி மைய இயக்குனர் டாக்டர் கே.ஜாபர் அலி அளித்த பதில்களும்:
எனது மகன் பி.இ., இறுதியாண்டு கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்துக்கொண்டிருக்கிறான். இதற்கு பிறகு, வெளிநாட்டில் எம்.எஸ்., படிக்க வேண்டும் என்கிறான்; அல்லது எம்.சி.ஏ., எம்.பி.ஏ., இவற்றில் எது படிக்க வைக்கலாம்?
-வளர்மதி, காரைக்குடி
பி.இ., கம்ப்யூட்டர் சயின்ஸ் படித்திருப்பதால் எம்.சி.ஏ., படிக்க வேண்டிய அவசியமில்லை. எம்.பி.ஏ., அல்லது எம்.எஸ்., படிக்கலாம். ஆராய்ச்சி படிப்பைத்தவிர மற்ற அனைத்து படிப்புகளும் இந்தியாவிலேயே உள்ளன. எனவே, எம்.எஸ்., படிப்பதாக இருந்தால் வெளிநாடுதான் செல்லவேண்டும் என்ற அவசியமில்லை. ஐ.ஐ.டி., போன்ற நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்களில் படிக்க தயார்படுத்தலாம்.

நான் எம்.எஸ்சி., சாப்ட்வேர் இன்ஜினியரிங் 4ம் ஆண்டு படிக்கிறேன். இந்தாண்டு கேம்பஸ் இன்டர்வியூ வெகுவாக குறைந்துவிட்டது. எனக்கு வேலை கிடைக்குமா?
-பார்த்தசாரதி, மயிலாடுதுறை
உலக பொருளாதார நெருக்கடியால் தற்போது ஐ.டி., நிறுவனங்களில் வேலை வாய்ப்பு மந்தகதியில் உள்ளன. ஆனால், இதே நிலை நீடிக்காது. இந்த நிதியாண்டின் கடைசி காலாண்டில் முன்னேற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, 2010ல் நீங்கள் படிப்பை முடித்திருக்கும்போது உகந்த வாய்ப்புகள் இருக்கலாம். இப்போதைக்கு நீங்கள் செய்யவேண்டியது உங்களது படிப்பில் கவனத்தை செலுத்தவது தான்.

எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி இறுதியாண்டு படிக்கிறேன். நேனோ டெக்னாலஜியில் புராஜெக்ட் செய்யலாமா?
-கார்த்திகா, மதுரை
இந்தியாவில் தற்போது வேகமாக முன்னேறி வரும் துறை நேனோ டெக்னாலஜி. வெளிநாடுகள் உள்ள அளவுக்கு இத்துறை இன்னும் இங்கு வளர்ச்சி பெறாவிட்டாலும், எனினும், இரண்டு ஆண்டுகளில் சிறப்பான வாய்ப்புகள் உருவாகும். முதுநிலை படிப்பை முடித்தபிறகு, இத்துறையில் வெளிநாடுகளில் ஆராய்ச்சி மேற்கொள்வதால், வாய்ப்புகளை பிரகாசமாக்கிக் கொள்ள முடியும்.

வி.ஐ.டி.,யில் எம்.எஸ்சி., பயோடெக்னாலஜி படித்து வருகிறேன். இத்துறைக்கான வேலை வாய்ப்புகள் மிக குறைவாக இருப்பதாக கூறுகிறார்களே? மேற்கொண்டு ஏதாவது படிக்கலாமா?
-ரேவதி, சென்னை
வேலை கிடைக்காததால், மேற்கொண்டு படிப்பது ஆரோக்கியமானதல்ல. இத்துறையை பொறுத்தவரை, வாய்ப்புக்கு குறைவில்லை. முன்னணி நிறுவனங்கள் கேம்பஸ் இன்டர்வியூ, நாளிதழ் விளம்பரம் போன்றவற்றின் மூலம் நேரடியாக ஆட்களை தேர்வு செய்யாவிட்டாலும், மறைமுகமாக ஆட்களை தேர்வு செய்துகொண்டுதான் இருக்கின்றன. எனவே, உங்களது கல்லூரி சீனியர் மாணவர்கள் எங்கு வேலையில் உள்ளனர் என்பதை அறிந்து அவர்களின் தொடர்பால் வேலை வாய்ப்பை விரிவுபடுத்திக்கொள்ளலாம். ஆன்லைனில் உங்களது பயோடேட்டாவை பதிவு செய்வது போன்ற நவீன முறையை முழுமையாக பயன்படுத்திக்கொள்ளலாம்.

பயோடெக்னாலஜி மாணவியான நான் அறிந்ததவரைக்கும் இத்துறையில் வேலைவாய்ப்புகள் இல்லை என்றே தோன்றுகிறது? எனது கல்லூரி முன்னாள் மாணவர்களுக்கும் வேலை கிடைக்கவில்லை. ஒருசிலர் ஐ.டி., துறையில் பணிபுரிகின்றனர்.
-தேன்மொழி, நெய்வேலி
உலக பொருளாதார நெருக்கடியில் சிக்காத துறைகளில் பயோடெக்னாலஜியும் ஒன்று. இதில் பார்மாசூட்டிக்கல், அக்ரி பயோடெக்னாலஜி, இத்துறைசார்ந்த அவுட்சோர்சிங் சர்வீஸ் ஆகிய மூன்றிலும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. பயோடெக்னாலஜி துறையைப் பொறுத்தவரை, ஆண்டுக்கு 30 முதல் 40 சதவீத வளர்ச்சி உள்ளது. இந்தியாவில் மட்டும் 325 நிறுவனங்கள் உள்ளன. 2012ம் ஆண்டில் 5 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு இத்துறை வளர்ச்சி அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே, வேலை வாய்ப்புகளை அறிந்துகொள்ள சில ஹோம்வொர்க் செய்வது நல்லது.

எனது மகன் பி.இ., இன்ஸ்ட்ருமென்டேஷன் அண்ட் கன்ரோல் துறையில் 65 சதவீத மதிப்பெண் எடுத்துள்ளான். படிப்பு முடிந்து இரண்டு ஆண்டுகளாகியும் இன்னும் படித்ததற்கு ஏற்ப வேலை கிடைக்கவில்லை.
-நிஷா, மதுரை
இன்னும் கூடுதல் மதிப்பெண் பெற்றிருந்தால் கேம்பஸ் இன்டர்வியூ மூலம் கூட வாய்ப்புகளை பெற்றிருக்கலாம் என்று தோன்றுகிறது. எனினும், மற்ற மாநிலங்களில் இத்துறை சார்ந்த வாய்ப்புகளை கண்டறிவது நல்லது. இத்துறை சார்ந்த சிறிய நிறுவனங்களில் இரண்டு ஆண்டு வரை அனுபவம் பெறுவதன்மூலம், பெரிய நிறுவனங்களுக்கான வாய்ப்புகளை பிரகாசமாக்கிக் கொள்ளலாம்.

பி.டெக் பயோடெக்னாலஜி இரண்டாமாண்டு படிக்கிறேன். அடுத்து எம்.பி.ஏ., படிக்கலாமா?
-நிலோபர், திண்டுக்கல்
எம்.பி.ஏ., படிப்பதற்கு ஏதேனும் ஒரு பட்டப்படிப்பு தான் தகுதியாக உள்ளது. துறைசார்ந்த அறிவுபெற்றவர்களுக்கு, மேலாண்மை திறன்களையும் வளர்த்துக்கொள்ள இப்படிப்பு உதவும். பயோடெக்னாலஜி துறையிலேயே நீங்கள் சிறக்க விரும்பித்தான் அப்படிப்பை தேர்வு செய்துள்ளீர்கள். உங்களை பொறுத்தவரை, அத்துறை சார்ந்த உயர்கல்வி பெறுவது சிறந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us