தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/‘டயபட்டாலஜி’ சான்றிதழ் படிப்பு அரசாணை ரத்து செய்தது ஐகோர்ட்!

‘டயபட்டாலஜி’ சான்றிதழ் படிப்பு அரசாணை ரத்து செய்தது ஐகோர்ட்!

‘டயபட்டாலஜி’ சான்றிதழ் படிப்பு அரசாணை ரத்து செய்தது ஐகோர்ட்!


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னையைச் சேர்ந்த டாக்டர் வி.பாலாஜி, நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரைச் சேர்ந்த டாக்டர் ஈஸ்வரன், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த டாக்டர் இளையராஜா, மதுரையைச் சேர்ந்த டாக்டர் பழனிகுமரன் ஆகியோர் தாக்கல் செய்த மனு:
அரசு மருத்துவக் கல்லூரிகளில் சர்க்கரை நோய் பற்றிய, ‘டயபட்டாலஜி’ சான்றிதழ் படிப்பை நடத்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் அளித்த திட்டத்துக்கு அரசு அனுமதியளித்துள்ளது. தொலைநிலைக் கல்வி மூலம் இந்த வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், ஆறு மாத கால படிப்பு எனவும் கூறப்பட்டது. எம்.பி.பி.எஸ்., பட்டம் பெற்றவர்கள் இதில் சேர தகுதியுடையவர்கள்.
இந்த சான்றிதழ் படிப்பை நடத்த மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவக் கவுன்சிலின் ஒப்புதல் பெறப்படவில்லை. இது, மருத்துவக் கவுன்சில் சட்டம் மற்றும் வழிமுறைகளுக்கு முரணாக உள்ளது. எனவே, இந்த உத்தரவை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட் டுள்ளது.
இம்மனுவை, தலைமை நீதிபதி கங்குலி, நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா அடங்கிய ‘முதல் பெஞ்ச்’ விசாரித்து பிறப்பித்த உத்தரவு:
தமிழக அரசு சார்பிலான வாதத்தை ஏற்க முடியவில்லை. இந்திய மருத்துவப் பட்டங்களுக்கான சட்டம் 1916ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. அது இன்னும் அமலில் உள்ளது. இச்சட்டத்தில், சான்றிதழ் படிப்பு வழங்குவதற்கும் சில கட்டுப்பாடுகள் உள்ளன.
அரசு மருத்துவக் கல்லூரிகளில் இந்திய மருத்துவக் கவுன்சிலின் அனுமதியுடன் முதுநிலை மருத்துவப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.  நிர்வாக உத்தரவின் மூலம், அதே பாடத்தில் சான்றிதழ் வகுப்பை நடத்த முயற்சிப்பது, மருத்துவக் கவுன்சில் அனுமதியுடன் நடத்தப்படும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கு முரணாக உள்ளது.
ஒவ்வொரு மாநிலத்துக்கும் உரிய அதிகாரத்தை, பார்லிமென்ட் நிறைவேற்றிய சட்டத்தின்படி செயல்படுத்த வேண்டும். தமிழக அரசு பிறப்பித்த அரசாணையானது, சட் டத்தை அமல்படுத்துவதாக இல்லை. சட்டத்தின்படி இல்லாத ஓர் இணை வகுப்பை அறிமுகப்படுத்த அரசு முயற்சிப்பது போலாகும். எனவே, இந்த அரசாணை ரத்து செய்யப்படுகிறது. இவ்வகுப்பின் மூலம் தமிழக அரசு எந்த சான்றிதழையும் வழங்க முடியாது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us