தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/தமிழகத்தில் ‘தப்பாட்டம்’ கற்று, அமெரிக்க பேராசிரியை அரங்கேற்றம்!

தமிழகத்தில் ‘தப்பாட்டம்’ கற்று, அமெரிக்க பேராசிரியை அரங்கேற்றம்!

தமிழகத்தில் ‘தப்பாட்டம்’ கற்று, அமெரிக்க பேராசிரியை அரங்கேற்றம்!


UPDATED : டிச 08, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 08, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


இளையான்குடி:
அமெரிக்க பேராசிரியை ஒருவர், தமிழகக் கலையான தப்பாட்டத்தில்  (பறை வாசித்தல்) பயிற்சி  பெற்று, அரங்கேற்றம் செய்துள்ளார்.
அமெரிக்கா ஒக்லகாமா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜோயி ஷெரினியன் (47). அங்குள்ள பல்கலை இசைத்துறையில் பேராசிரியையாக உள்ளார். கிராமிய இசை ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள இவர்,  ஜூலை மாதம், மதுரை மாவட்டம், இளையான்குடி அருகே முனைவென்றி கிராமத்திற்கு வந்தார். தப்பாட்டம் குறித்து நான்கு மாதங்கள் ஆய்வு செய்து, டிச. 6ம் தேதி அரங்கேற்றமும் செய்தார்.
ஜோயி ஷெரினியன் கூறியதாவது:
தமிழகத்தின் பல கிராமங்களில் தப்பாட்டம் இருப்பதாக கூறினர். முழுமையான கிராமச் சூழலில் இக்கலையை கற்றுக் கொள்ள விரும்பி, இக்கிராமத்தை தேர்வு செய்தேன்.
தமிழகத்தில் இக்கலை தோன்றிய வரலாறு, இந்துமத சடங்குகளில் இக்கலையின் பங்கு குறித்து ஆய்வு செய்தேன். இக்கலையில் 35 விதமான ‘அடி’ களில் பயிற்சி பெற்றேன். முன், தப்பாட்டத்தை கலைஞர்கள் கடமையாக செய்தனர். தற்போது, தொழிலாக செய்து வருகின்றனர். லேடி டோக் கல்லூரியில் ‘பெல்லோஷிப்’ படிப்புக்காக 1985ல் மதுரை வந்தேன். 1987 வரை கல்லூரியில் தங்கி படித்த போது, மிருதங்கம் கற்றேன்.
அப்போதே தமிழ் பேச கற்றுக் கொண்டேன். 1993-94 ல் மதுரை இறையியல் கல்லூரியில் ‘தமிழ் கிறிஸ்துவ இசை’ குறித்து ஆராய்ச்சி (பி.எச்டி.,) செய்தேன்.
கர்நாடக சங்கீதமும் ஓரளவு தெரியும். தமிழ் இசைக் கருவிகளில் தாளம் என்னை கவர்ந்துள்ளது. இதனால் கிராமிய கலைகளை கற்று வருகிறேன். இவ்வாறு ஜோயி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us