சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை போட்டி: தமிழக மாணவர்களுக்கு பரிசு
சுற்றுச்சூழல் குறித்த கட்டுரை போட்டி: தமிழக மாணவர்களுக்கு பரிசு
UPDATED : டிச 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
மும்பை: சுற்றுச்சூழல் பிரச்னைகள் குறித்து தேசியளவில் பள்ளிகளுக்கு இடையேயான, ‘ஹென்கல் ஈகோபெட்டிஷன்’ கட்டுரைப் போட்டியில் தமிழகத்தைச் சேர்ந்த இருவர் பரிசு பெற்றுள்ளனர்.
ஹென்கல் இந்தியா நிறுவனம், ஈகோபெட்டிஷன் மற்றும் என்விரோகேர் விருது -2008க்காக, ‘உங்கள் நீலத்தங்கத்தை சேமிக்கவும்’ என்ற தலைப்பில், தண்ணீரின் மறுபயன்பாடு மற்றும் மறு சுழற்சிக்கான செயல்திட்டம் பற்றிய கட்டுரைப் போட்டி ஒன்றை நடத்தியது.
இதில், இந்தியா முழுவதும் உள்ள 500 பள்ளிகளில் இருந்து பங்கேற்ற மாணவர்களில், ஆறு இறுதிப் போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். பின், அவர்களுக்கிடையே கடந்த 3ம் தேதி நடந்த இறுதிப் போட்டியில், டில்லியைச் சேர்ந்த சித்தார்த் பானர்ஜி, முதல் பரிசாக 10,000 ரூபாய் பெற்றுள்ளார். தமிழகத்தில், பொள்ளாச்சியைச் சேர்ந்த மானசா பரமசிவம் இரண்டாம் பரிசாக 7,500 ரூபாய் பெற்றுள்ளார்.
கோல்கட்டாவைச் சேர்ந்த புஷ்ரா ஆலம் மூன்றாம் பரிசாக 5,000 ரூபாய் பெற்றுள்ளார். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அபாஸ் அலி சிறந்த படைப்பாற்றலுக்காக சிறப்புப் பரிசு பெற்றுள்ளார்.
