UPDATED : டிச 08, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
சாந்திநிகேதன்: மேற்குவங்கம், விஸ்வபாரதி பல்கலையின் கட்டமைப்பு வசதிகளுக்காக 95 கோடி ரூபாய் நிதி வழங்குவதாக பிரதமர் மன்மோகன் சிங் அறிவித்துள்ளார்.
மேற்குவங்கம் சாந்திநிகேதனில் உள்ள விஸ்வபாரதி பல்கலையின் பட்டமளிப்பு விழா நடந்தது.
இதில், கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங் பேசியதாவது:
விஸ்வபாரதி பல்கலையின் பழம் பெருமைக்குப் புத்துயிர் கொடுக்கும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. பல்கலையில் வசதியை ஏற்படுத்துவது குறித்து ஆய்வு செய்வதற்காக கவர்னர் கோபால கிருஷ்ண காந்தி தலைமையில் குழு அமைக்கப்பட்டது. பல்கலையின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக நிதி ஒதுக்க வேண்டும் என இந்தக் குழு பரிந்துரை அளித்தது.
இந்தப் பரிந்துரையை ஏற்று, தற்போது 95 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. பல்கலை வசதிகளை விரிவுபடுத்துவதற்காக பல்கலை மானியக் குழுவும் நிதி ஒதுக்கியுள்ளது.
என் வாழ்க்கையிலேயே ஆசிரியராகப் பணிபுரிந்த அனுபவம் தான் மிகவும் திருப்தியானதாக இருந்தது. இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் பேசினார்.
