தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/அரசு பள்ளியில் கோஷ்டி தகராறு: மாணவியர் கல்வி பாதிப்பு

அரசு பள்ளியில் கோஷ்டி தகராறு: மாணவியர் கல்வி பாதிப்பு

அரசு பள்ளியில் கோஷ்டி தகராறு: மாணவியர் கல்வி பாதிப்பு


UPDATED : டிச 09, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 09, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல் நிலைப் பள்ளியில் தலைமையாசிரியர் தலைமையில் ஆசிரியர்கள் ஒரு கோஷ்டியாகவும், எதிர்தரப்பு ஆசிரியர்கள் மற்றொரு கோஷ்டியாகவும் செயல்பட்டு வருவதால், மாணவிகளின் படிப்பு பாதிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள், மாணவிகளிடையே ஒற்றுமையைக் குலைத்து அவர்கள் மத்தியிலும் இரண்டு கோஷ்டிகளை உருவாக்கியுள்ளனர். தலைமை ஆசிரியருக்கு ஆதரவான மாணவிகள் டிச. 8ம் தேதி வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். இப்பள்ளியில் தலைமை ஆசிரியராக விஸ்வநாதன் பொறுப் பேற்றதில் இருந்தே பிரச்னை ஏற்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது. ஆசிரியர்களிடம் கெடுபிடி, மாணவிகளிடம் செக்ஸ் சில்மிஷம், கட்டாய வசூல் என தலைமை ஆசிரியர் மீது பல குற்றச்சாட்டுகளை எதிர் கோஷ்டியினர் அடுக்குகின்றனர்.
‘தலைமை ஆசிரியர் வந்ததில் இருந்து தேர்ச்சி சதவீதம் உயர்ந்துள்ளது. ஆசிரியர்கள் சரியாக வேலை பார்க்க வேண்டும் என தலைமை ஆசிரியர் கூறுகிறார். இதைப் பிடிக்காத ஆசிரியர்கள்தான், தலைமை ஆசிரியர் மீது பொய் குற்றச்சாட்டுகளைக் கூறுகின் றனர்’ என தலைமையாசிரியருக்கு ஆதரவான கோஷ்டி கூறுகிறது.
ஆசிரியர்களிடையே உள்ள மோதலால் மாணவிகளும் இரண்டு கோஷ்களாகப் பிரிந்துள்ளனர். ஆசிரியர்களே, இந்த கோஷ்டியை உருவாக்கி, தங்களுக்கு ஆதரவாகப் போராடுமாறு துõண்டிவிட்டுள்ளனர். தலைமை ஆசிரியருக்கு ஆதரவான மாணவிகள் நேற்று காலை திடீரென பள்ளி வளாகத்திற்குள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மாணவிகளை வகுப்புகளுக்குச் செல்லுமாறு தலைமை ஆசிரியர் கூறியும், அவர்கள் கேட்கவில்லை. தலைமை ஆசிரியருக்கு எதிராகச் செயல்படும் ஆசிரியர்களைக் கண்டித்தும், பொய் புகார் கூறும் சக மாணவிகளைக் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் செய்தனர்.
ஆசிரியர்கள் சஸ்பெண்ட்: சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியின், தலைமை ஆசிரியர் விஸ்வநாதன், முதுகலை ஆசிரியர் சங்கரநாராயணன் இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
ஆசிரியர்களிடையே ஏற்பட்ட கோஷ்டிச் சண்டையால், மாணவிகள் ஆர்ப்பாட்டம் செய்த விவகாரம் பெரிய பிரச்னையை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக, கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, பள்ளிக் கல்வித் துறையிடம் அறிக்கை அளித்தனர். அதனடிப்படையில், தலைமை ஆசிரியர் விஸ்வநாதன் மற்றும் முதுகலை ஆசிரியர் சங்கரநாராயணன் இருவரையும் சஸ்பெண்ட் செய்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டது.
பள்ளியின் புதிய தலைமை ஆசிரியையாக பொம்மக்காள் நியமிக்கப்பட்டுள்ளார். இவர், டிச. 8ம் தேதியே பொறுப்பு ஏற்றுக் கொண்டார். அதேபோல், சங்கர நாராயணனுக்குப் பதில், புதிய முதுகலை ஆசிரியர் ஒருவரும் நியமிக்கப்பட்டுள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us