தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/இன்சூரன்ஸ் துறையில் வாய்ப்பு: டில்லி பல்கலையுடன் ‘மெட்லைப்’ ஒப்பந்தம்

இன்சூரன்ஸ் துறையில் வாய்ப்பு: டில்லி பல்கலையுடன் ‘மெட்லைப்’ ஒப்பந்தம்

இன்சூரன்ஸ் துறையில் வாய்ப்பு: டில்லி பல்கலையுடன் ‘மெட்லைப்’ ஒப்பந்தம்


UPDATED : டிச 10, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 10, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

இந்தியாவில் உள்ள முதல் பிரபல 5 இன்சூரன்ஸ் நிறுவனங்களில் இடம்பெற்றுள்ள ‘மெட்லைப்’  நிறுவனம் 2 ஆயிரம் விற்பனை மேலாளர்களையும், 30 ஆயிரம் நிதி ஆலோசகர்களையும் அடுத்த இரண்டு மாதங்களில் நியமிக்க உள்ளது.
இந்நிலையில், இன்சூரன்ஸ் துறையில் திறமையாளர்களை உருவாக்கும் வகையில், டில்லி பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது.
‘புதியதாக ஆட்கள் நியமனம் செய்யும் எங்களது திட்டத்தை, இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும்’ என்று ‘மெட்லைப்’  மேலாண்மை இயக்குனர் ராஜேஸ் ரேலான் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக துணை வேந்தர் தீபக் பென்தால் கூறுகையில், ‘இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்குவதில் இந்த முயற்சி மிகவும் உதவியாக இருக்கும்’ என்றார்.
டில்லி பல்கலைக்கழகத்துடன் இந்நிறுவனம் மேற்கொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி, லைப் இன்சூரன்ஸ் விற்பனை பயிற்சி, சட்ட விதிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்க உள்ளது.
இதற்காக, ‘யுவோதயா’ என்ற மூன்று மாதகால படிப்பை டில்லி பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படிப்பில் முதற்கட்டமாக 30 மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர். இதில் சேர டிச. 22ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.
வேலை வாய்ப்பு பயிற்சி திட்டத்தை கொண்டுள்ள இப்படிப்புக்கு தகுதியான மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்படிப்பை வெற்றிகரமாக படித்து முடிக்கும் மாணவர்களுக்கு டில்லி பல்கலைக்கழகம் மற்றும் ‘மெட்லைப்’  இன்சூரன்ஸ் நிறுவனம் இணைந்து சான்றிதழ் வழங்குகிறது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us