UPDATED : டிச 11, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
டோக்கியோ: சோனி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும், அதிரடியாக 8,000 பேரை வேலையை விட்டு நீக்க முடிவு செய்துள்ளது.
உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையால், பல்வேறு தொழில் நிறுவனங்களும் கடும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளன. பல நிறுவனங்கள் சிக்கன நடவடிக்கையில் இறங்கியுள்ளன. சோனி எலக்ட்ரானிக்ஸ் நிறுவனமும் சிக்கன நடவடிக்கையில் களம் இறங்க திட்டமிட்டுள்ளது. சோனி நிறுவனத்தில், உலகம் முழுவதும் ஒரு லட்சத்து 86 ஆயிரம் பேர் பணிபுரிந்து வருகின்றனர்.
இவர்களில், தற்காலிக பணியாளர்கள் 8,000 பேரை வேலையை விட்டு நீக்க திட்டமிடப்பட்டுள்ளது. முதலீட்டை குறைக்கவும், தொழிற்சாலைகளின் எண்ணிக்கையை 10 சதவீதம் குறைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. அதிக வருவாய் தராத இடங்களில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகள் மூடப்பட உள்ளன. இதன்மூலம், ஆண்டுக்கு 100 கோடி ரூபாயை சேமிக்க முடியும் என சோனி நிறுவனம் கருதுகிறது.
