தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/ஐகோர்ட் அறிவுரைப்படி சட்டக் கல்லூரி இயங்கும்: துரைமுருகன்

ஐகோர்ட் அறிவுரைப்படி சட்டக் கல்லூரி இயங்கும்: துரைமுருகன்

ஐகோர்ட் அறிவுரைப்படி சட்டக் கல்லூரி இயங்கும்: துரைமுருகன்


UPDATED : டிச 11, 2008 12:00 AM

ADDED : ஜன 01, 1970 05:30 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : டிச 11, 2008 12:00 AM ADDED : ஜன 01, 1970 05:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு


சென்னை:
திருவொற்றியூரில் மாவட்ட உரிமையியல் கோர்ட் திறப்பு விழா, தமிழக சட்ட அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடந்தது.
மாவட்ட நீதிபதி நாகராஜன் வரவேற்றார். புதிய கோர்ட்டை ஐகோர்ட் நீதிபதி தமிழ்வாணன் திறந்து வைத்தார்.
விழாவில் அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:
மக்களுக்காகத் தான் நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. நான் பல பொறுப்புகளில் இருந்தாலும் வக்கீல் என்பதில் பெருமைப்படுகிறேன். அது தான் நிரந்தர பதவி. ஆனாலும், சட்டக் கல்லூரியில் நடந்த விரும்பத்தகாத சம்பவத்திற்காக வெட்கித் தலை குனிகிறேன். வக்கீல்கள் தனித்தன்மையை விட்டுக் கொடுக்காதீர்கள். போலீஸ் நிலையத்தில் போய் நிற்காதீர்கள்.
வழக்குகள் உ<ங்களைத் தேடி வர வேண்டும். கோர்ட்டிற்குத் தேவையான கட்டமைப்பு வசதிகள் செய்து தரப்படும். சிறிய கோர்ட்டுகளில் வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. வக்கீல்கள் போராட்டம் செய்வதைக் கைவிடுங்கள். கோர்ட்டுக்கு ஒழுங்காகச் சென்றால் வழக்குகள் தேங்காது. சட்டக் கல்லூரி மாணவர்கள் விரும்பத் தகாத சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர்.
அந்தச் சம்பவத்தைப் பார்த்துவிட்டு 120 நாடுகளில் இருந்து என்ன நடந்தது என பலரும் கேட்கின்றனர். ஐகோர்ட் யோசனைப்படி சட்டக் கல்லூரி இனி சிறப்புடன் நடத்தப்படும். இவ்வாறு துரைமுருகன் பேசினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us