UPDATED : டிச 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: புதுச்சேரி அருகிலுள்ள பகூர் கிராமத்தில் புதிய தொழிற்பயிற்சி நிறுவனம் (ஐ.டி.ஐ.,) தொடங்கப்பட்டுள்ளது.
பயிற்சி நிறுவனத்தை துவக்கிவைத்து, புதுசேரி முதல்வர் வைத்தியலிங்கம் பேசுகையில், ‘பிட்டர், ஒயர்மேன் ஆகிய படிப்புகள் இங்கு வழங்கப்படும். இதில் 42 மாணவர்கள் ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளனர்.
கிராமப்புற மாணவர்களிடையே போதிய தொடர்பியல் திறனை (கம்யூனிகேஷன் ஸ்கில்ஸ்) வளர்க்கும் விதமாக பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன’ என்றார்.
தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கந்தசாமி பேசுகையில், ‘தொழிற்பயிற்சி நிறுவன வளாகம் அமைந்துள்ள இந்த கிராமத்திற்கு தேவையான பஸ் போக்குவரத்து வசதி ஏற்படுத்திக் கொடுக்கப்படும்’ என்றார்.
