கட்டாய தமிழ் பாடம்: கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை
கட்டாய தமிழ் பாடம்: கடைபிடிக்காத பள்ளிகள் மீது நடவடிக்கை
UPDATED : டிச 13, 2008 12:00 AM
ADDED : ஜன 01, 1970 05:30 AM
அ நிறம் | அளவு
நாகர்கோவில்: தமிழகத்தில் விரைவில் 12 ஆயிரத்து 500 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்தார்.
நாகர்கோவிலில், நிருபர்களிடம் அவர் மேலும் கூறியதாவது:
தமிழகத்தில் உள்ள 1,005 துவக்கப் பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளாகவும், 100 நடுநிலைப்பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும். அதேபோல், 100 உயர்நிலைப் பள்ளிகள், மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் தமிழ் பாடம் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இதனை கடைபிடிக்காத பள்ளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
